'தொழில் பாதுகாப்பு படை நவீனமயமாகிறது'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தொழில் பாதுகாப்பு படை நவீனமயமாகிறது'

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரக்கோணம்: ''மத்திய தொழில் பாதுகாப்பு படை, நவீனமயமாகிறது,'' என, தென் பிராந்திய ஐ.ஜி., - அனந்த்மோகன் கூறினார்.வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளது. இங்கு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 55 பெண்கள் உட்பட, 530 தலைமை காவலர்களுக்கு, 25 வாரம் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. மத்திய தொழிற் பாதுகாப்பு படை, டி.ஐ.ஜி., காமோ தலைமை வகித்தார்.தென் பிராந்திய, ஐ.ஜி., - அனந்த்மோகன், வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டார். பின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பயிற்சி பெற்ற கிர்தேஷ்குமார் திவாரிக்கு கோப்பை மற்றும் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு, அதி நவீன பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், அவர்களால் எவ்வித அச்சுறுத்தலையும் எதிர் கொள்ள முடியும். தற்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை, அதி நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. அதே போல, அதன் அலுவலகங்களும், முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.காகிதம் அல்லாத அலுவலக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படைகளுக்கான பல்வேறு, 'ஆப்ஸ்'கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த படையில் பெண் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை