மூன்று கட்ட போராட்டம் : கிராம உதவியாளர்கள் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று கட்ட போராட்டம் : கிராம உதவியாளர்கள் முடிவு

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க கோரி, கிராம உதவியாளர்கள், மூன்று கட்ட போராட்டங் களில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.பருவநிலை மாற்ற பேரிடர்களின் போது, கிராமங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதில், கிராம உதவியாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 24 மணி நேர பணியில் ஈடுபடும் அவர்களுக்கு, சிறப்பு காலமுறை சம்பளம் வழங்கப்படுகிறது.இதை கண்டித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர்களிடம், வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படும் என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:வருவாய் துறை செயலர், வருவாய் நிர்வாக கமிஷனர் ஒப்புக்கொண்டபடி, வரையறுக்கப்பட்ட சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, வரும், 15, 16ம் தேதிகளில், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம், மார்ச், 9ல், சென்னை வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் பெருந்திரள் முறையீடு, ஏப்., 3 முதல், 6 வரை தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்படும்.அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, மாநில நிர்வாகிகள் பேசி முடிவு செய்வர். உதவியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற, அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-பிப்-201819:12:09 IST Report Abuse
Pasupathi Subbian இவர்கள் தான் ஒரு ஆட்சியின் அஸ்திவாரம். இவர்கள் இல்லையேல் அதிகாரிகள் இல்லை, அரசு இல்லை. அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி இவர்களை சேர்ந்தது. இந்த அத்தியாவசிய ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை அரசு கட்டாயம் செய்துதரவேண்டும். அதிகாரிகளுக்கும், எம் எல் ஏ களுக்கும் ஊதிய உயர்வு கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. சாதனை செய்வது இவர்கள் மட்டுமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X