ஒரே நபருக்கு மீண்டும் வீடு ஒதுக்கீடு இல்லை : மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நபருக்கு மீண்டும் வீடு ஒதுக்கீடு இல்லை : மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement

அரசு திட்டங்களில், குறிப்பிட்ட சில நபர்களே, தொடர்ந்து வீடு ஒதுக்கீடு பெறும் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய நடைமுறையை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழகத்தில், குடிசை மாற்று வாரியம் வாயிலாக, இதுவரை, 1.40 லட்சம் குடும்பங்கள் வீடு, மனை பெற்றுள்ளன. சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில், சாலையோரங்களிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் வசிப்பவர்களுக்கு, வேறு இடங்களில், வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறு ஒதுக்கீடு பெறுபவர்கள், சில மாதங்களிலேயே, அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு அல்லது விற்று விட்டு, மீண்டும் சாலையோர பகுதிக்கே வந்து விடுகின்றனர். மீண்டும் மீண்டும் வீடு ஒதுக்கப்பட்டாலும், இப்பிரச்னைக்கு தீர்வே இல்லாமல் உள்ளது. பொருளாதாரத்தில், மிக பின்தங்கியவர்கள் என்பதால், கடும் நடவடிக்கை எடுக்க முடியாமல், மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தவித்து வருகின்றனர். இந்த சிக்கலுக்கு தீர்வு காண, மத்திய அரசு புதிய நடைமுறைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தை, குடிசை மாற்று வாரியம் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்திற்கு, மத்திய அரசு, பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன்படி, ஆவணங்கள் அனைத்தையும் இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயம். வீடு பெற விண்ணப்பித்தவர்கள், வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள், அந்த வீடு தொடர்பான பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் வெளியிடப்படுகின்றன. விண்ணப்பதாரரின் பெயர், ஆதார் எண்ணை குறிப்பிட்டால், அவருக்கு எப்போது, எங்கு, எந்த வீடு ஒதுக்கப்பட்டது. அதன் அளவு, மத்திய - மாநில அரசுகள் வழங்கிய நிதி உள்ளிட்ட விபரங்கள் தெரிந்து விடும். இந்த விபரங்களை யார் வேண்டு மானாலும் அறியலாம். ஒரு முறை சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆவணங்களை, வேறு எந்த பகுதியிலும், மறுமுறை பயன்படுத்த முடியாத அளவுக்கு, சிறப்பு சாப்ட்வேர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு முறை வீடு ஒதுக்கீடு பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வேறு இடங்களில் வீடு பெற முடியாத அளவுக்கு நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-பிப்-201819:15:55 IST Report Abuse
Pasupathi Subbian அட மாப்பு வச்சுட்டானய்யா ஆப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X