டி.எஸ்.பி., ஜெரினா பேகத்திற்கு மனித உரிமை ஆணையம் சம்மன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.பி., ஜெரினா பேகத்திற்கு மனித உரிமை ஆணையம் சம்மன்

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: திருவண்ணாமலையில், விளைந்த நெற்பயிரை டிராக்டரை கொண்டு உழுத வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, டி.எஸ்.பி., ஜெரினா பேகம், நேரில் ஆஜராக வேண்டும் என, மாநில மனித உரிமைகள் ஆணையம், சம்மன் அனுப்பியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தில், நிலத் தகராறு காரணமாக, பயிர் விளைந்திருந்த நெல் வயலை, ஒரு தரப்பினர் டிராக்டர் வைத்து உழுதனர். இதில், ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, டி.எஸ்.பி., ஜெரினா பேகம் மீது புகார் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம், வழக்கு பதிவு செய்துள்ளது.இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு, வரும், 27ல் நேரில் ஆஜராகும்படி, மாநில மனித உரிமைகள் ஆணையம், ஜெரீனா பேகத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் அன்றைய தினம், நீதிபதி, ஜெயச்சந்திரன் அமர்வில் ஆஜராகி, விளக்கம் அளிக்கவுள்ளார்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பின், காத்திருப்போர் பட்டியலில் இருந்த, டி.எஸ்.பி., ஜெரினா பேகம், சில தினங்களுக்கு முன், சென்னை விபச்சார தடுப்பு பிரிவு, டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-பிப்-201819:18:09 IST Report Abuse
Pasupathi Subbian புது பதவிக்கு சென்ற இவர் அங்கே என்னத்தை சாதித்துள்ளார் ? விளைந்த பயிரும், நிறைமாத கற்பிணியும் ஒன்று. அதை இவர் கேடு செய்தது மன்னிக்கமுடியாத குற்றம்
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
10-பிப்-201806:43:54 IST Report Abuse
kalyanasundaram SHE WOULD HAVE CLEARED LAND FOR CONSTRUCTING A MOSQUE OR BURIAL GROUND OR ILLEGAL ACTIVITIES
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
10-பிப்-201805:58:14 IST Report Abuse
Bhaskaran அமுது நிகர் நெற்பயிரை பாழ் செய்த இந்த ஈனப்பிறவியை இன்னும் பணியில் இருக்கவிடலாமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X