எம்.பி.பி.எஸ்., 'சீட்' மோசடி : 2வது முறையாக டாக்டர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ்., 'சீட்' மோசடி : 2வது முறையாக டாக்டர் கைது

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக, 20க்கும் மேற்பட்டோரிடம், பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த, பிசியோதெரபி டாக்டரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், இரண்டாவது முறையாக கைது செய்தனர். தர்மபுரியை சேர்ந்தவர், ராஜேஸ்வரன், 37; பிசியோதெரபி டாக்டர். இவர், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, சீட் வாங்கி தருவதாக கூறி, 35 லட்சம் ரூபாய் பணம் பெற்று, மோசடி செய்ததாக, எழும்பூரை சேர்ந்த அனிதா என்பவர், சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக, ராஜேஸ்வரனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், பிப்., 1ல் கைது செய்து, சென்னை, புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், மருத்துவ சீட் வாங்கி தருவதாகக்கூறி, தன்னிடம், 20 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, சென்னையை சேர்ந்த நெல்சன் என்பவரும், புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, சிறையில் உள்ள ராஜேஸ்வரனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், இரண்டாவது முறையாக நேற்று கைது செய்தனர்.இதேபோல, தமிழகம் முழுவதும், 20க்கும் மேற்பட்டோரிடம், ராஜேஸ்வரன் பணம் வசூலித்து, மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர் மீது, தர்மபுரி, சேலம், ஈரோடு, செங்கல்பட்டு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இதனால், ராஜேஸ்வரனை காவலில் எடுத்து விசாரிக்கவும், அவரது சொத்துக்களை முடக்கவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X