வேலூரில் 2 தேர் எரிந்து நாசம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூரில் 2 தேர் எரிந்து நாசம்

Updated : பிப் 10, 2018 | Added : பிப் 10, 2018 | கருத்துகள் (3)
Advertisement
வேலூரில் 2 தேர் எரிந்து நாசம்

வேலுார்: வேலுாரில், இரண்டு கோவில் தேர்கள் எரிந்து நாசமான சம்பவம், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலுார், சத்துவாச்சாரியில், பிரசித்தி பெற்ற சாலை கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் திருவிழா நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். கோவிலுக்கு, கடந்த ஆண்டு, 50 லட்சம் ரூபாய் செலவில், தேக்கு மரத்தில் தேர் செய்யப்பட்டது. திருவிழாவின் போது, இந்த தேரில், சுவாமி உலா வரும். இந்த தேரின் அருகில், சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோவிலுக்கு சொந்தமான சிறிய தேரும் நிறுத்தப்பட்டிருந்தது. இரண்டு தேர்களும் ஓலை, பலகையால் மூடப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, இரண்டு தேர்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தன.வேலுார் தீயணைப்பு துறையினர், பொது மக்கள், போலீசார் சேர்ந்து, ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இதில், 5 லட்சம் ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது தெரிந்தது. வேலுார் தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு இளைஞர்கள் சிலர், பைக்கில் வந்து, தேருக்கு அருகில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது அவர்களுக்கு மொபைல் போனில் தகவல் வந்த பின், இரண்டு தேருக்கும் தீ வைத்து, தப்பிச் சென்றதாகவும், சத்துவாச்சாரி போலீசார் விசாரணையில் தெரியவந்தது.தேருக்கு தீ வைத்தவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்கள் எரிந்ததை அபசகுணமாக பக்தர்கள் கருதுவதால், தங்கள் வீடுகளின் முன் தீபம் ஏற்றி வழிபட்டனர். தேர்கள் எரிப்பு தொடர்பாக, சத்துவாச்சாரியைச் சேர்ந்த செல்வராஜ், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட செல்வராஜ், ராணுவத்தில் பணிபுரிந்து, அங்கிருந்து ஓடி வந்து, ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் மீது, ஒரு கொலை வழக்கு, வெடிகுண்டு வீசிய வழக்கு மற்றும் வீட்டுக்கு தீ வைத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. குடி போதையில், இரண்டு தேருக்கும் தீ வைத்ததை ஒப்புக்கொண்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
10-பிப்-201812:43:40 IST Report Abuse
balakrishnan அந்த செல்வராஜ் என்பவர் யார் என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும், அவன் ஒருவேளை காவிகள் இயக்கத்தை சேர்ந்தவனாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம், துணிந்து இந்த வேலையே அவர்கள் தான் செய்வார்கள், அவனை சும்மா விடக்கூடாது,
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
10-பிப்-201806:50:57 IST Report Abuse
Amirthalingam Sinniah சிறையில்போட்டு நன்றாக வேலைவாங்கி அதில் வரும் பணத்தை கோவிலுக்கு கொடுங்கள். மக்கள் பீதியடையவேண்டியதில்லை, சில மாக்கள்தான் இதை செய்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-பிப்-201802:37:58 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ இதுக்கு டாஸ்மாக் மந்திரிதான் பொறுப்பேற்கணும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை