லஞ்சம் வாங்கி பிடிபட்ட டி.எஸ்.பி., - எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கி பிடிபட்ட டி.எஸ்.பி., - எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

Updated : பிப் 10, 2018 | Added : பிப் 10, 2018 | கருத்துகள் (2)
Advertisement

ஆம்பூர்: லஞ்சம் வாங்கிய, டி.எஸ்.பி.,- - எஸ்.ஐ., ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம், செங்கல் சூளை அதிபர் பன்னீர்செல்வத்தை மணல் கடத்த சொல்லி, ஆம்பூர் டி.எஸ்.பி., தன்ராஜ், ஆம்பூர் டவுன், எஸ்.ஐ., - லுார்து ஜெயராஜ் ஆகியோர் கட்டாயப்படுத்தினர்.பின், 1.45 லட்சம் ரூபாயை, லஞ்சமாக வாங்கினர்.இவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர். கைதான இருவரையும் வேலுார் மாவட்ட எஸ்.பி., பகலவன் நேற்று சஸ்ெபண்ட் செய்தார்.
குவியும் புகார் : ஆம்பூர் பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர், நேற்று, மாவட்ட, எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:நாங்கள் மாட்டு வண்டியில் மணல் எடுக்கும் தொழிலை விட்டு விட்டோம். ஆனால், தொழில் செய்யும்படியும், ஒரு முறைக்கு, 500 ரூபாய் வீதம் லஞ்சம் தர வேண்டும் என்றும், ஆம்பூர், டி.எஸ்.பி., தன்ராஜ் மிரட்டினார். இதனால், நாங்கள் கள்ளத்தனமாக மணல் எடுத்து வருகிறோம். எனவே, இது குறித்து வழக்கு பதிவு செய்து, டி.எஸ்.பி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். இதே போல், பவ்வேறு தரப்பினர் புகார் கூறி வருகின்றனர். ஆம்பூர், டி.எஸ்.பி., யின் கட்டுப்பாட்டில், எட்டு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும், மாதா மாதம், இரண்டு லட்சம் ரூபாய் மாமூலை, டி.எஸ்.பி., தன்ராஜ் கட்டாயப்படுத்தி வாங்கி வந்தார். அவர் கைது செய்யப்பட்டது பொதுமக்களை விட, எங்களுக்கு தான் அதிக மகிழ்ச்சியாக உள்ளது என, போலீசார் கூறினர். கைதான, ஆம்பூர் டி.எஸ்.பி., தன்ராஜ் மீது ஏராளமான புகார்கள் வந்து கொண்டுள்ளன. ஆம்பூர் தாலுகாவில் மணல் கடத்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, காட்டன் சூதாட்டம், செம்மரக் கட்டைகள் கடத்தல், கள்ளச் சாராயம் கடத்தல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தவர்களிடம், மாதா மாதம் கணிசமாக மாமூல் வாங்கி வந்துள்ளார். இதனால், இந்த தொழில் அதிகரித்தது.
வீட்டில் சோதனை : தன்ராஜ் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் அவர்கள் தன்ராஜை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது தான், பன்னீர்செல்வம் புகார் கொடுக்க வந்தார். அவரிடம் லஞ்சம் வாங்கும் போது சிக்கினார்.இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்ராஜின் வீடு, வேலுாரில் உள்ள, எஸ்.ஐ., லுார்து ஜெயராஜ் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.மேலும், தன்ராஜ், லுார்து ஜெயராஜ் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களை போலீசார் ஆய்வு செய்ததில் ஏராளமான மணல் கடத்தல் தாதாக்கள் மற்றும் குற்ற பின்னணியில் உள்ளவர்கள் எண்கள் தெரிந்தது. இதனால், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த, மேலும் சிலர் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்னை வீட்டில் சோதனை : டி.எஸ்.பி., தன்ராஜுக்கு சொந்தமான, சென்னை, ஆழ்வார்பேட்டை, சி.ஐ.டி., காலனியில் உள்ள வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை, டி.எஸ்.பி., குமரகுரு தலைமையிலான, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று சோதனை நடத்தினர்.ஏழு மணி நேரம் நடந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த விபரங்களை, போலீசார் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
10-பிப்-201806:51:06 IST Report Abuse
ramasamy naicken விரைவில் இவர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று செல்ல இருக்கின்றார் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201801:30:55 IST Report Abuse
Mani . V இவுங்களை எல்லாம் சஸ்பெண்டு செய்கிறார்கள். அமைச்சர் விஜய பாஸ்கர், காமராஜ், சரோஜா போன்றவர்கள் ஏன் சஸ்பெண்டு செய்யப்படவில்லை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X