மன்னார்குடி ஜீயர் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்ட ஸ்ரீவி., ஜீயர் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மன்னார்குடி ஜீயர் வேண்டுகோளை ஏற்று
உண்ணாவிரதத்தை கைவிட்ட ஸ்ரீவி., ஜீயர்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஆண்டாளை அவதுாறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர், மன்னார்குடி ஜீயரின் வேண்டுகோளை ஏற்று கைவிட்டார்.

கடந்த ஜன.7ல் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆண்டாளை அவதுாறாக பேசிய வைரமுத்து, ஆண்டாள் சன்னதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் துவக்கினார்.


இரண்டாம் நாளாக நேற்றும் தொடர்ந்தார். காலை 9:00 மணிக்கு உண்ணாவிரத மண்டபத்துக்கு பா.ஜ., தேசிய செயலர் எச் .ராஜா வந்து ஜீயரை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடகோரினார்.

காலை 11:00மணிக்கு மன்னார்குடி செண்டலங்கார செண்பகராமானுஜ ஜீயர் ஸ்ரீவில்லிபுத்துார் வந்தார். ''துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் ஜீயர்கள் உண்ணாவிரதம் இருப்பது நாட்டிற்கும், மனித குலத்திற்கும் நல்லதல்ல,''

Advertisement

என கூறி சடகோப ராமானுஜ ஜீயரிடம் உண்ணாவிரதத்தை கைவிட கோரினார்.

இதே கருத்தை முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.வி.சேகர் மற்றும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் கூறுகையில், '' மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் வலியுறுத்தியதை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். தன்னை நிந்தித்தவர்களை ஆண்டாள் தாயாரே தண்டிப்பாள். இனிமேல் இந்து மதத்தை மட்டுமல்ல எந்த மதத்தையும் யாரும் இழிவுபடுத்தி பேசக்கூடாது. இந்து மக்கள் விழிப்புணர்விற்காக ஆன்மிக பிரசாரம் தொடரும்,'' என்றார்.

ஸ்ரீவி., ஜீயர்,உண்ணாவிரதம்,வாபஸ்


இதையடுத்து மன்னார்குடி ஜீயர் வழங்கிய துளசி தண்ணீரை பருகி உண்ணாவிரதத்தை ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் நிறைவு செய்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (49+ 69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
11-பிப்-201807:01:34 IST Report Abuse

Manianஉண்மையான பக்தன் எவனுமே கெடையாது. கோவில், சர்ச், பள்ளிவாசல் போறவன் வாயிலே கடவுள் என்று புலம்பினாலும், ஒரு ஏழைக்கு குழந்தையை கண்டதும் மனம் இறங்குவதில்லை. போலி வேஷம் போட்டு, கடவுளிடம் பொருள், பெண், பணம், பதவி என்றெல்லாம் கேக்கிறானே தவிர, இனி மேல் பொறுக்க கூடாது, முந்த மட்டும் பிறருக்கு உதவி செய்யும் மனம் தா என்று கேட்பதில்லை. அங்கேயெல்லாம் போகாட்டி, ஊரை ஏமாத்த முடியாதே என்று, பெரிய பெரிய போட்டு எல்லாம் இட்டு ஏமாத்தற களவாணிகள் அதிகம்.

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
10-பிப்-201819:32:45 IST Report Abuse

Appavi Tamilanவடிவேலு காமெடியை போல சொல்வது என்றால் இதற்கு பெயர்தான் வழியில் கிடப்பதை அள்ளி வாயில்போட்டுக்கொள்வது. மதவாத அரசியல் செய்யும் சில காமெடி பீசுகளின் பேச்சைக்கேட்டு இப்படி உண்ணா விரதம் இருக்கிறேன் என்று ஏன் அசிங்கப்படவேண்டும்??? தூண்டிவிட்ட அந்த ஈனப்பிறவிகள், தீக்குளிப்பேன் என்றெல்லாம் வாய்ச்சவடாலோடு நிறுத்திக்கொண்டார்கள். அப்பாவியாக இருந்த இந்த மனிதரை பாவம் இப்படி அசிங்கப்பட வைத்துவிட்டனர். இவர்கள் எல்லாம் யார் என்றே மக்களுக்கு தெரியாது. பிறகு எப்படி இவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்? முதலில் இந்த போராட்டமே தேவை அற்ற ஒன்று. யாரோ சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக தூண்டிவிடப்பட்ட ஒன்று. அதில் பலிகடாதான் இவர். இவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில ஒரு ஈ, காக்காய் கூட இல்லையே ஏன்? இவரை தூண்டிவிட்டவர்கள் நன்றாக மூக்குப்பிடிக்க கட்டிவிட்டு குறட்டை விட, இவர் மட்டும் தனியாளாக போராடவேண்டுமா??? கவிஞர் வருத்தம் தெரிவித்ததே அதிகம். நீதிமன்றமும் அவர் சொல்லியதில் எந்த தவறும் இல்லை என்ற எடுத்த எடுப்பிலேயே வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. இன்னும் என்ன போராட்டம்??? இது வேற்று வறட்டு கவுரவத்திற்காக நடத்தப்பட்ட அப்பட்ட நாடகம். அதனை இவர் புரிந்துகொண்டுவிட்டார்.

Rate this:
vikky - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201815:51:16 IST Report Abuse

vikkyபுது கண்டுபிடிப்பு,,, ஜீயர் உண்ணாவிரதம் இருப்பது நாட்டிற்கும் , மக்களுக்கும் நல்லதல்ல ,,எப்புடி ,?? எனக்கு தெரிந்து , ஜீயர் உண்ணாவிரதம் இருந்தால் அது அவரது உடல்நலத்தை தான் பாதிக்கும் , நாட்டையோ , மக்களையோ பாதிக்காது ... நாட்டில் பல லட்சம் மக்கள் வறுமையினால் பட்னி கிடக்கிறார்கள் , அது நாட்டுக்கு நல்லதா ??

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
10-பிப்-201815:39:28 IST Report Abuse

Endrum Indianஇவருக்கு ஏழைரை திராவிட சனி நடக்கின்றது. "இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய சடகோப ராமானுஜ ஜீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது நாமக்கல் மாவட்டம், சீதாராம்பாளையத்தை சேர்ந்த வைரவேல், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரால். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது".

Rate this:
m.senthil kumar - tamilnadu,இந்தியா
10-பிப்-201812:31:21 IST Report Abuse

m.senthil kumarஉண்ணாவிரதம் இருந்து என்னத்த சாதிச்சிட்டீங்க ரத்து பண்றதுக்கு. ஒரு ஒரு மாதம் இருந்து பாருங்களேன். ஒருவர் பேசியதற்கு இவ்வளவு வேகப்பட்டு ஆர்ப்பாட்டம் பண்றீங்களே, தமிழ்நாட்டுலதானே இருக்கீங்க வேற எந்த பிரச்சனையும் பார்க்கலையா, இல்ல கேட்கலையா விவசாயி சாவுறான் கர்நாடகக்காரன் தண்ணி தரமாட்டேங்கிறான் மீத்தேன் திட்டம் இன்னும் எவ்வளவோ பிரச்சனைக்கு குரல்கொடுக்காத நீங்க இதற்க்கு போராடுவது வேதனை அளிக்கிறது.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-பிப்-201811:55:55 IST Report Abuse

Malick Rajaஎத்தனை காலம்தான் ஏமாற்றுவதை இந்த நாட்டிலே என்ற பாட்டையும் திருடாதே தம்பி திருடாதே அதோடு சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் என்ற முழுப்பாடல்களையும் கேட்டாலே போதும் விடை வடையாக கிடைக்கும்

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
10-பிப்-201811:55:31 IST Report Abuse

Rahimராஜா சர்மா இப்போ உனக்கு திருப்தியா ? சும்மா இருந்த புள்ள பூச்சிய கிளப்பிவிட்டு நீ ஒதுங்கி கிட்ட இப்போ அவரு கெடந்து வட சட்டியில் வறுபடுறாரு.

Rate this:
Only Real No politics - Chennai,இந்தியா
10-பிப்-201811:38:41 IST Report Abuse

Only Real No politicsஎங்களை மன்னித்து விடுங்கள் இந்த உண்ணாவிரத போட்டியில் நீங்கள் இன்னமும் எங்க கட்டு மரத்தின் சாதனையை முறியடிக்கவில்லை, பெட்டர் லக் நெக்ச்ட் டைம்................

Rate this:
R. Vidya Sagar - Chennai,இந்தியா
10-பிப்-201810:28:56 IST Report Abuse

R. Vidya Sagarமன்னார்குடின்னா என்ன சும்மாவா?

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
10-பிப்-201810:14:44 IST Report Abuse

narayanan iyerவைரமுத்துவிற்கு திராவிடர்களின் / தமிழ் தமிழ் என்று வெறும்பேச்சு பேசும் கூட்டத்தின் கைத்தட்டல் இருக்கிறது அதனால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற மம்மத்தைத்தான் காரணம். வல்லினம் மெல்லினம் இடையினம் என்றால் என்ன தெரியாது அப்படி என்ன தமிழை நிலைநிறுத்துகின்றார்கள்? எல்லா தலைவர்களின் பிள்ளைகளும் ஆங்கிலப்பள்ளியில்தானே படிக்கிறார்கள் .எந்த பயலும் தமிழ் பள்ளிக்கூடம் போவதில்லை பின் என்ன சவடால் தமிழ் தமிழ் என்று . எல்லா கட்சிகளிலும் பெரிய மனிதர்கள் என்று சொல்பவன் எவனும் தமிழ் பள்ளிக்கூடம் வைக்கவில்லை .எல்லோரும் நடத்துவது ஆங்கிலபள்ளிகள்தானே . தமிழ் அமைப்புக்கள் ஏன் அதை சாடவில்லை.சே என்ன மனித பதர்களோ

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
10-பிப்-201814:31:44 IST Report Abuse

BoochiMarunthuசமஸ்க்ரிதம் தான் உயர்நது என்றால் நீ ஏன் தமிழ் படிக்கிறே ஆங்கிலம் படிக்கிறே ? சமஸ்க்ரிதத்திலே பேசி படித்து வேலைக்கு போக வேண்டியது தானே ? முடியுமா ?...

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-பிப்-201814:36:14 IST Report Abuse

தமிழ்வேல் பள்ளி விவகாரத்தில் எல்லா கட்சியும் அப்படிதான்....

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement