'சிஸ்டம்' சரி செய்வாரா ரஜினி?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிஸ்டம்' சரி செய்வாரா ரஜினி?

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழ் நாடு சிஸ்டம், ரஜினி அரசியல் ,ஆன்மீக அரசியல்  , நடிகர் ரஜினி, கர்நாடகா சிஸ்டம் , காவிரி நதி , அமைச்சர் ஜெயகுமார் , அ.தி.மு.க., ரஜினிகாந்த் ,Tamil Nadu System, Rajini Political, Spiritual Politics, Actor Rajini, Karnataka System, Cauvery River, Minister Jayakumar, AIADMK, Rajinikanth, aanmeega arasiyal,

சென்னை: ''நடிகர் ரஜினி, கர்நாடகாவில் சிஸ்டத்தை சரி செய்து, காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: நடிகர் ரஜினி, தமிழகத்தில், 'சிஸ்டம்' சரியில்லை என்கிறார். ஜெ., ஆட்சியில், சிஸ்டம் சரியாக இருந்ததால் தான், லோக்சபா தேர்தலில், 37 தொகுதிகளை கைப்பற்றினோம்; சட்டசபையில், தனித்து போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தோம்.அ.தி.மு.க.,வை சீண்டிப் பார்க்க வேண்டாம். நாங்கள், யாரிடமும் சண்டைக்கு செல்ல மாட்டோம்; வந்த சண்டையை விட மாட்டோம். இதைத் தான், ஜெ., கற்றுக் கொடுத்து உள்ளார்.கர்நாடக அரசு, நமக்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது. ரஜினி அங்கு சென்று, சிஸ்டத்தை சரி செய்து, நமக்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும். காவிரி நீர் குறித்து, அவர் வாய் திறப்பதில்லை. தினகரனை பொறுத்தவரை, இரண்டு நிலைப்பாடு. அவர் செய்யும் அநியாயங்களுக்கு, மத்திய,மாநில அரசு கண்மூடித்தனமாக ஆதரவு அளித்தால், 'நல்ல அரசு' என்பார். நடவடிக்கை எடுத்தால், 'மோசமான அரசு' என்பார். கொள்கை ரீதியாக, மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு, தினகரனுக்கு கிடையாது; அவர் சந்தர்ப்பவாதி.எங்களை பொறுத்தவரை, மத்திய அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம். மாநிலத்தின் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தினால், குரல் எழுப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - chennai,இந்தியா
10-பிப்-201817:46:52 IST Report Abuse
ram சிஸ்டம் என்றால் என்ன...???
Rate this:
Share this comment
Cancel
M Ragh - Kanchi,இந்தியா
10-பிப்-201816:52:11 IST Report Abuse
M Ragh Waste speach. All department NOT funds, They are not able pay 8 month to 1 year dues. r corporation , Not able to release 10 months due payment, What is super TN govt..
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
10-பிப்-201812:42:53 IST Report Abuse
Ramakrishnan Natesan சிஸ்டம் சரி இருந்ததால் தான் இவர் எந்திரன் படத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டரிலும் எந்திரனை ஓடவிட்டார் அப்போ சிஸ்டம் சரியில்லை என்று சொல்லவில்லை . ஒரு வேலை தள்ளாத வயதில் பொல்லாத ஆசை வந்ததால் இந்த விளைவோ, இவர் உண்மையான தமிழ் பற்று உள்ளவர் என்றால் உடனே கர்நாடக சென்று பேசி காவேரி தண்ணீர் கொண்டுவர ஆவண செய்யணும்
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
10-பிப்-201810:32:33 IST Report Abuse
christ எல்லா சிஸ்டத்தையும் ரஜினி சரி செய்யணும்
Rate this:
Share this comment
Cancel
G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா
10-பிப்-201810:16:48 IST Report Abuse
G.MUTHIAH ரஜினிகாந்த், ஒரு படத்திற்க்கு எவ்வளவு உண்மையான பணம் வாங்கி நீர். எவ்வளவு வரி கட்டி நீர். ரஜினிகாந்த் குடும்பச்சொத்து மொத்தம் எவ்வளவு . ரஜினிகாந்த் வாழ்க்கை சிஸ்டம் ஒழுங்க இருக்கு என மக்களுக்கு முதலில் கூரும்.
Rate this:
Share this comment
Cancel
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
10-பிப்-201810:08:26 IST Report Abuse
Bebeto Right question. Rajini should answer to this. T N should get 205 TMC of Kaveri water and Karnataka illegally blocking it. center and supreme court must take severe action on Karnataka and arrange to release water. All those settled in Tamilnadu including telugu, kannada, malayaali and north Indians should fight for this.
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
10-பிப்-201808:57:23 IST Report Abuse
Varun Ramesh சார், ஜெயலலிதா கற்றுக்கொடுத்த பாடங்களை பின்பற்றி, கர்நாடகத்திலிருந்து பெற வேண்டிய தண்ணீரை கேட்டு அல்லது போராடி பெற்றுத்தர வேண்டியது ஆட்சியிலிருக்கும் நீங்கள் செய்ய வேண்டியது. அதற்கு ரஜினி என்ன செய்ய முடியும்? ஆட்சியும் அதிகாரமும் அவரிடமா இருக்கிறது? லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளை கைப்பற்றியும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சியையும் பிடித்த நீங்கள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என்ன கண்டீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
10-பிப்-201808:06:24 IST Report Abuse
srisubram panam kottamal neengal 37 idangalai vetri kondeergal endru ?
Rate this:
Share this comment
Cancel
Krish - Bengalooru,இந்தியா
10-பிப்-201807:28:37 IST Report Abuse
Krish ரஜனி போற்றும் கன்னட ராஜகுமார் ராஜனியையும் சரி வேறு எந்த நடிகரையும் கர்நாடகத்தில் வளர விடவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
10-பிப்-201806:48:23 IST Report Abuse
Rajarajan இது என்ன கேள்வி ?? இன்னும் புரியாத மாதிரி எத்தனை நாளைக்கு தான் நடிப்பீங்க ?? சிஸ்டம் சரியா இருந்தா, இந்நேரம் அமைச்சர்கள் / MLA க்கள் / MP க்கள் / அரசு ஊழியர்கள் தங்கள் வாரிசுகளை அரசு பள்ளிகளில் சேர்த்திருப்பாரே ?? அரசு மருத்துவமனைகளில் தங்கள் நோய்களுக்கு வைத்தியம் பார்த்திருப்பாரே ?? அப்படின்னா உங்க சிஸ்டம் மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லைனு தானே அர்த்தம் ?? நீங்க தவறை தொடர்ந்து செய்விங்க, ஆனா அதை சுட்டி காட்டினா உங்களுக்கு கோபம் வருமோ ?? தூங்கறவனை எழுப்பலாம், தூங்கறமாதிரி நடிக்கறவனை எப்படி எழுப்புவது ?? இப்போ புரிஞ்சிருக்கும்னு நம்பறோம். இப்போ சொல்லுங்க, உங்க சிஸ்டம் சரி இல்லை தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை