அடுத்தடுத்து புகார் ஊழியர், 'சஸ்பெண்ட்' | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து புகார் ஊழியர், 'சஸ்பெண்ட்'

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஒரு ரேஷன் கடையில் இருந்து, தொடர்ந்து, 10 புகார்கள் வந்தால், அந்த ஊழியர் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட, கடும் நடவடிக்கைகள் எடுக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
முறைகேடு : தமிழக ரேஷன் கடைகளில், இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கும் உணவு பொருட்கள் வினியோகத்தில், ரேஷன் ஊழியர்கள் முறைகேடு செய்கின்றனர். அதனால், மக்கள் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, தொடர்ந்து புகார் வரும் ஊழியர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க உள்ளது.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் முறைகேட்டை கட்டுப்படுத்த, 'ஸ்மார்ட் கார்டு, பாயின்ட் ஆப் சேல்' கருவி போன்றவை வழங்கப்பட்டு உள்ளன. இருப்பினும், ஊழியர்கள், முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன. இதனால், பாதிக்கப்படுவோர், எளிதில் புகார் தெரிவிக்க, எஸ்.எம்.எஸ்., சேவை உள்ளது. அந்த சேவையின் கீழ், ஒவ்வொரு கடையிலும் இருந்தும், பெறப்படும் புகார்கள் குறித்து அறிக்கை தயாரிக்கப்படும். அதில், ஒரே கடையில் இருந்து, தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருந்தால், அந்த கடைக்கு, சிறப்பு பறக்கும் படையினர் அனுப்பி வைக்கப்படுவர்.
நடவடிக்கை : அவர்கள் கடையில் தீவிர விசாரணை நடத்தி, தவறுகளை கண்டறிந்தால், அதற்கு காரணமான ஊழியர் மீது, 'சஸ்பெண்ட், டிஸ்மிஸ்' போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படி, அந்த கடைகளை நடத்தும், கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு பரிந்துரைப்பர். இந்த பணி, விரைவில் துவங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை