இளவரசி மகன் உட்பட 4 பேருக்கு, 'சம்மன்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளவரசி மகன் உட்பட 4 பேருக்கு, 'சம்மன்'

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

விசாரணைக்கு ஆஜராகும்படி, இளவரசி மகன், விவேக் உட்பட, நான்கு பேருக்கு, ஜெ., விசாரணை கமிஷன், 'சம்மன்' அனுப்பி உள்ளது. ஜெ., மரணம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. விசாரணை கமிஷனில், 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது. அவர்களில் பலர், சசிகலாவுக்கு எதிராக, புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, விளக்கம் அளிக்கும்படி, விசாரணை கமிஷன், 2017 டிச., 21ல், சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியது. சசிகலா மீது புகார் தெரிவித்தவர்கள் விபரம், அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டு விபரம் கேட்டும், அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த, அனுமதி கோரியும், சசிகலா சார்பில், அவரது வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது விசாரணை முடிந்து, ஜன., 30ல், தீர்ப்பு வழங்கப்பட்டது.'விசாரணை கமிஷனில் ஆஜரானவர்களில், டாக்டர் சிவகுமார், டாக்டர் பாலாஜி, ஜெ., உதவியாளர், பூங்குன்றன் ஆகியோரிடம், முழுமையாக விசாரணை முடியவில்லை.'அவர்கள் தவிர, மற்றவர்களின் வாக்குமூலங்களை, சசிகலா தரப்பினர் பெற்றுக் கொள்ளலாம்' என, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 'பதில் அளிக்க அவகாசம் அளிக்கும் வகையில், 15 நாட்களுக்கு, விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்' என, சசிகலா தரப்பில் கோரப்பட்டது.அதை ஏற்று, 15 நாட்களுக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. சசிகலா, ஏழு நாட்களுக்குள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் சார்பில், வழக்கறிஞர்கள், புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். இரு வார இடைவெளிக்கு பின், விசாரணை கமிஷன், 12ல், விசாரணையை துவக்க உள்ளது.அன்றைய தினம், ஜெ., கார் டிரைவராக இருந்த அய்யப்பன்; 13ல், இளவரசி மகன், விவேக்; 14ல், டாக்டர் பாலாஜி; 15ல், போயஸ் கார்டன் அலுவலக உதவியாளர், கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.எனவே, 12 முதல், மீண்டும் விசாரணை சூடுபிடிக்க உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை