செய்திகள் சில வரிகளில்...| Dinamalar

பொது செய்தி

இந்தியா

செய்திகள் சில வரிகளில்...

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மாமிச தடை
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, 13ம் தேதி, பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்,பிராணிகளை கொல்வதற்கோ, இறைச்சியை விற்பதற்கோ தடை விதித்து, மாநகராட்சி கால்நடை துறை உத்தரவிட்டுள்ளது.
குடிசைகளில் பா.ஜ., தலைவர்கள்
மாநிலத்தின் பல இடங்களிலுள்ள, குடிசை வாழ் பகுதியில் பா.ஜ., தலைவர்கள், இன்றிரவு தங்கி, அங்கேயே உணவு சாப்பிடுகின்றனர். எடியூரப்பா, ஆர்.அசோக், பெங்களூரு காந்திநகரில், ஆட்டோ ஓட்டுநர் முனிரத்தினா வீட்டில் தங்குகின்றனர். ஜெகதீஷ் ஷெட்டர், ஹுப்பள்ளியில் சாமுண்டீஸ்வரிநகரிலும்; கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஷிவமொகா மண்டலியிலும்; ஷோபா, மைசூரின் கேதமாரனஹள்ளியிலும்; பாரதி ஷெட்டி, ஒய்.சம்பங்கி, தங்கவயலிலும் உள்ள குடிசை பகுதிகளில் தங்கவுள்ளனர். மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசுக்கு நாளை அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.
மறியல் செய்தவர்கள் மீது தடியடி
சிக்கமகளூரு சகராயபட்டணத்திலுள்ள அய்யன ஏரியிலிருந்து, கடூருக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஏரியில் குறைந்தபட்சம் இரண்டடி தண்ணீர் இருத்தல் வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. உத்தரவை மீறி, தண்ணீர் திறந்துவிட்டுள்ளதாக கூறி, அப்பகுதியினர், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 3 கி.மீ., துாரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் கேட்டு கொண்டும், போராட்டத்தை கை விடாததால், லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.
பெற்றோரிடம் இளம் தம்பதி ஒப்படைப்பு
ஹாசனை சேர்ந்த நுாதன், அதே பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து வந்தார். இருவரும் வீட்டுக்கு தெரியாமல், குக்கே சுப்பிரமணியா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். ஹாசனுக்கு திரும்பிச் செல்ல பணமின்றி, ரயில் நிலையத்தில் அவதிப்பட்டனர். இவர்களை பார்த்த சிலர், காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அழைத்து வந்து, அவர்களின் பெற்றோரையும் வரவழைத்து, அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X