கனடாவில் வேலை வாய்ப்பு : முதியவரிடம் ரூ.22.54 லட்சம் மோசடி| Dinamalar

கனடாவில் வேலை வாய்ப்பு : முதியவரிடம் ரூ.22.54 லட்சம் மோசடி

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மத்திகரே: 'இ - மெயில்' மூலம், நபர் ஒருவர், கனடாவில் வேலை வாங்கி கொடுப்பதாக நம்பவைத்து, முதியவரை ஏமாற்றி, 22.54லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.பெங்களூரு, மத்திகரேவில் வசித்து வருபவர், கோபால் சுப்பிரமணியன் அய்யர், 63. சமீபத்தில், இவருக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து, இ - மெயில் தகவல் ஒன்று வந்தது.'கனடாவில் வேலை காலியாக உள்ளது. விருப்பமிருந்தால், வேலை வாங்கி கொடுக்கிறோம்' என குறிப்பிடப்பட்டிருந்தது.இதை உண்மையென்று நம்பிய முதியவர், வேலையில் சேர விரும்புவதாக, இ - மெயில் மூலமாக தெரிவித்தார். அவருக்கு பதில் அனுப்பிய, அந்நபர், 'அந்த வேலையில், கை நிறைய ஊதியம் கிடைக்கும். அதில் சேர வேண்டுமானால், முன் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்' என கூறினார்.இதற்கு சம்மதித்தமுதியவர், அந்நபர் தெரிவித்திருந்த, வங்கி கணக்கில், கொஞ்சம், கொஞ்சமாக, 22.54 லட்சம் ரூபாய் செலுத்தினார். பல நாட்களாகியும், வேலை உத்தரவுகடிதம் வரவில்லை. நாளடையில், அந்நபரின் இ - மெயில் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டது, முதியவருக்கு தெரிந்தது. சைபர் கிரைம் போலீசாரிடம், புகார் செய்தார்.அறிமுகமில்லாத மொபைல் எண், இ - மெயில், இணைய தளத்தில், வேலை வாங்கிக் கொடுப்பது, பரிசு விழுந்துள்ளது என பல விதமான ஆசை வார்த்தைகளை கூறி, யாராவது தொடர்பு கொண்டால், அலட்சியப்படுத்த வேண்டும்; படித்தவர்களே ஏமாறுகின்றனர்.சைபர் கிரைம் போலீசார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X