சிறுமியிடம், 'சில்மிஷம்' : பள்ளி நடன ஆசிரியர் கைது| Dinamalar

சிறுமியிடம், 'சில்மிஷம்' : பள்ளி நடன ஆசிரியர் கைது

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோல்கட்டா: கோல்கட்டாவில், 2ம் வகுப்பு மாணவியிடம், பாலியல் ரீதியாக அத்துமீறிய ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கோல்கட்டா நகரில், தேசப்பிரியா பார்க் என்ற தனியார் பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும் மாணவி, 'பள்ளிக்கு போக மாட்டேன்' என, சில நாட்களாக அழுது அடம்பிடித்து வந்தாள். பெற்றோர் திட்டியதை அடுத்து, பள்ளிக்கூடத்தில் உள்ள நடன ஆசிரியர், பாலியல் சில்மிஷம் செய்வதை கூறி அழுதாள்.ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளிக்குச் சென்று, அந்த நடன ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆயிரக்கணக்கான பெற்றோர் பங்கேற்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது. 2ம் வகுப்பு சிறுமி, ஆறு மாதங்களாக, நடன ஆசிரியரால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில், இரண்டு போலீசார் காயமடைந்தனர். 'பள்ளியில், கட்டுமான பணிகள் நடப்பதால், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள், தற்காலிகமாக வேலை செய்யவில்லை' என, பள்ளிக்கூட நிர்வாகம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை