'காப்பி' அடித்ததை தடுத்ததால் தேர்வு எழுதாத 6 லட்சம் பேர்| Dinamalar

'காப்பி' அடித்ததை தடுத்ததால் தேர்வு எழுதாத 6 லட்சம் பேர்

Added : பிப் 10, 2018
Advertisement

லக்னோ: உ.பி.,யில், 10௦ மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், 'காப்பி' அடித்தல் உட்பட, பல்வேறு மோசடிகள் நடப்பதை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, ஆறு லட்சம் மாணவ - மாணவியர், தேர்வு எழுதாமல் புறக்கணித்து உள்ளனர்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள், 6ல் துவங்கின. இந்த தேர்வுகள் எழுத, 66.37 லட்சம் மாணவ - மாணவியர், தங்கள் பெயரை பதிவு செய்திருந்தனர்.மாநிலத்தில், சில ஆண்டுகளாக, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், அதிகளவில் மோசடி நடப்பதாக புகார்கள் எழுந்தன. தேர்வு அறையில் மாணவர்கள், 'காப்பி' அடிக்கவும், புத்தகத்தை பார்த்து எழுதவும், சர்வ சுதந்திரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.இதையடுத்து, இந்த ஆண்டு, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மோசடிகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசு உத்தரவிட்டது.
புறக்கணிப்பு : தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டு, மையங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கையால், ஆறு லட்சம் மாணவ - மாணவியர், தேர்வு எழுதாமல் புறக்கணித்து உள்ளனர். இது பற்றி, மாநில துணை முதல்வரும், இடைநிலை கல்வி அமைச்சருமான, தினேஷ் சர்மா கூறியதாவது: உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையில் இருந்த, சமாஜ்வாதி ஆட்சியில், கல்வித் துறையில், மாபியா கும்பல் ஆதிக்கம் இருந்தது. லட்சக்கணக்கில் பணம் வாங்கி, மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால், கல்வியின் தரம், அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. இதையடுத்து, தேர்வுகளில் மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்வின் முதல் மூன்று நாட்களில் மட்டும், ௬.33 லட்சம் மாணவ - மாணவியர், தேர்வு எழுத வரவில்லை. இதில், 10ம் வகுப்பு தேர்வு எழுதாதவர்கள், 3.79 லட்சம் பேர்; பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்கள், 2.53 லட்சம் பேர்.
முறைகேடு : தேர்வு எழுதாதவர்களில், ௮௦ சதவீதத்துக்கும் அதிகமானோர், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பள்ளிகளுக்கே அவர்கள் வந்ததில்லை. தேர்வின் போது மட்டுமே, அவர்களை பார்க்க முடியும். 'தேர்ச்சி நிச்சயம்' எனக் கூறி, இவர்களிடம், கல்வி மாபியா கும்பல், லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளது. ஆனால், அரசின் நடவடிக்கையால், அவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மாநிலத்தில், அகிலேஷ் ஆட்சியில், கல்வித் துறையில், கோடிக் கணக்கில் ஊழல், முறைகேடு நடந்துள்ளது. மேலும், பள்ளிகள், ஆண்டுக்கு, 220 நாட்கள் கண்டிப்பாக செயல்பட வேண்டும் என, உத்தரவிட்டு உள்ளோம். பள்ளிகளில் பாடம் சரியாக கற்பிக்கப்பட்டால், மோசடிகளை குறைக்கலாம். ஆசிரியர்களை, நான் குறை சொல்லவில்லை. கல்வி மாபியா கும்பல் குறித்து, ஆசிரியர்களே தகவல் கூறினர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை