சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தந்தை உட்பட 4 பேருக்கு ஆயுள்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தந்தை உட்பட 4 பேருக்கு ஆயுள்

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை:சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், தந்தை உட்பட நான்கு பேருக்கு ஆயுள்சிறை விதித்து, கோவை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை அருகேயுள்ள இருகூரை சேர்ந்த, கூலி தொழிலாளியின், மகள், அங்குள்ள பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தார். மனைவி வேலைக்கு சென்ற நேரத்தில், சிறுமியை, தனது மகள் என்றும் பார்க்காமல், 59 வயது காமக்கொடூர தந்தை, பாலியல் பலாத்காரம் செய்தார்.சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி, தனது தாயாரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். அதை பயன்படுத்தி, மனைவி இல்லாத நேரத்தில், பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார், 21,சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பிறகு, அதே பகுதியை சேர்ந்த பாலன்,32, சிறுமியின் வீட்டிற்கு சென்று, தந்தைக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். தந்தை போதையில் மயக்கமடைந்த நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார்,29, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பாலியல் பலாத்காரம் செய்தார். 2012 முதல் 2015 வரை நான்கு பேரும் சிறுமியை பல முறை பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்படி, 2015, ஜன., 30ல்,தந்தை மற்றும் பிரேம்குமார், பாலன், ரவிக்குமாரை, போலீசார் கைது செய்து, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி அல்லி, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஆயுள்சிறை, தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக, அரசு உதவித்தொகை பெற்றுதர உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை