தேர்வு அறை அருகே குத்தாட்டம் பார்த்த எம்.எல்.ஏ.,| Dinamalar

தேர்வு அறை அருகே குத்தாட்டம் பார்த்த எம்.எல்.ஏ.,

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ம.பி., பள்ளியில், தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவர்களை பற்றி கவலைப்படாமல், பா.ஜ., - எம்.எல்.ஏ., நடன நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, திகம்கர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில், மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில், அந்த பள்ளி மைதானத்தில், உள்ளூர் தலைவர் ஒருவரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.ஒலிபெருக்கியில் பாடல்கள் சத்தமாக அலற, நவநாகரிக உடைகளில், நடன அழகியர், 'குத்து டான்ஸ்' ஆடினர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த உள்ளூர், பா.ஜ., - எம்.எல்.ஏ., இந்த நடனத்தை ரசித்து பார்த்தார்.இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,வின் இந்த செயலுக்கு, காங்., கண்டனம் தெரிவித்துள்ளது. ம.பி., அரசு, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-பிப்-201819:57:33 IST Report Abuse
Pasupathi Subbian காட்டுமிராண்டிகள். பெயரை கெடுக்கவந்த கோடரி காம்புகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை