லஷ்கர் பயங்கரவாதிக்கு 7 ஆண்டு சிறை| Dinamalar

லஷ்கர் பயங்கரவாதிக்கு 7 ஆண்டு சிறை

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு: பாகிஸ்தானின், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன், பிலால் அகமது குடா என்கிற இம்ரான் ஜலால். இவன், லஷ்கர் அமைப்புக்காக, 2001ல் இருந்து பெங்களூரில் செயல்பட்டு வந்தான். 2007ல், துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிகுண்டுகள் மற்றும் சாட்டிலைட் போன் வைத்திருந்ததற்காக, பெங்களூரு போலீசார் இவனை கைது செய்தனர்.பயங்கரவாத அமைப்புகளுக்கு பண உதவி செய்தது மற்றும் பண பரிமாற்ற மோசடி வழக்குகள், இம்ரான் மீது போடப்பட்டன.பெங்களூரு, பண பரிமாற்ற மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.இந்த வழக்கில், நீதிபதி சிவசங்கர் நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கினார். இம்ரானுக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை