பொருளாதார தூண்!| Dinamalar

பொருளாதார தூண்!

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பொருளாதார தூண்!

விவசாயத்தை, நாட்டின் பொருளாதார துாண் என, மகாத்மா காந்தி கூறினார். அது, என்றும் உண்மையே. விவசாயிகளின் வருமானத்தை, ௨௦௨௨க்குள், இரு மடங்காக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் வெற்றியடைவது, விவசாய மாணவர்களின் கையில் தான் உள்ளது. விவசாய பட்டதாரிகள், புதுமைகளை புகுத்தி, சாதனை படைக்க வேண்டும்.
ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி
சிறப்பு அந்தஸ்து!
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்; போலாவரம் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அம்மாநில மக்களின் கோரிக்கையை, காங்கிரஸ் ஆதரிக்கிறது. இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கவும், மக்களுக்கு ஆதரவு கிடைக்கவும், அனைத்து கட்சிகளும் ஒன்று சேரவும், நேரம் வந்துவிட்டது. ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
ராகுல், தலைவர், காங்.,
பதிலுக்கு பதில்!
சமூகத்தில், அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக அமைதியையும், பாதுகாப்பையும் சீரழிக்க, துப்பாக்கி மொழியில் நம்பிக்கை உள்ளோருக்கு, அதே முறையில் பதில் தரப்படும். துப்பாக்கியை நம்பி, மக்களை அச்சமுறச் செய்யும் யாரிடமும், கருணை காட்ட முடியாது. கிரிமினல்களை, மாநில அரசு, இரும்புக்கரம் கொண்டு அடக்கும்.
யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
10-பிப்-201811:23:13 IST Report Abuse
Sukumaran Sankaran Nair பொருளாதாரத்தை தனித்து பார்ப்பதும்,பழைய அத்திவாரத்தில்,புது தூண்களை நிறுத்த முயல்வது போன்றுதான் இதுவும் எப்படி என்ஜினீயர்கள் தங்கள் கட்டிடங்கள் திட்டங்களை,மேற்கொள்வதற்கு முன்பாக,புவியியல்,சுற்றுச்சூழல்,பசுமை போன்ற இதர சம்பந்தவைகளுக்கும் உரிய கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமோ,அப்படி,ஒருங்கிணைப்பு, (Integration ஒரு பக்கமும், சிதைவு மறுபக்கமும்Disintegration ஒருசேர நடைபெற்றவண்ணம் இந்த இடைப்பட்ட காலத்தில்,நிகழ்வு (Event)செயல்பாட்டை மட்டும் கருத்தில் கொள்ளாமல் உருப்பெறும் இந்த காலத்தேவையின்(Formative Age) கட்டமைப்பில் நாம் நமது ஆழ்ந்த சிந்தனையைக் கொண்டிருப்பது விவேகமான தொலைநோக்கு எனலாம்.இந்த நிகழ்வு அதாவது உதாரணத்திற்கு,அன்று,நான் நோய்வாய்ப்பட்ட தினம்,இன்று என்னுடைய பிறந்த நாள் என்றே பழகியும்.பள்ளியில் கற்றுக்கொண்ட விதத்திலும் அவை நம்மை கலந்துவிட்டதனால்,செயல் முறை (Process) க்கு,அளிக்க வேண்டிய முக்கியத்துவம் எவ்வளவு அவசியம் என்பது தெளிவாகிறது.பொருளாதார முன்னேற்றம் ,மக்கள் வாழ்வின் நெறியைக்(Ethics) கடைப்பிடித்தலை ஒட்டியே அதன் அளவு அமையும். இன்று அரசாங்கங்கள் உயரிய நெறிகளுடனான மக்கள் சமூக கட்டமைப்புகளை (Civil Society) கொத்தமைப்பிலான முறைக்கு நிறுவும் இலக்கை கொண்டாலன்றி,மாற்றம் என்பது நீண்ட கனவாகவே ஆகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை