ஐ.எஸ்.ஐ.,க்கு உளவு பார்த்த விமான படை அதிகாரி கைது| Dinamalar

ஐ.எஸ்.ஐ.,க்கு உளவு பார்த்த விமான படை அதிகாரி கைது

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,க்கு உளவு பார்த்த, இந்திய விமானப் படை அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்திய விமானப் படையில், உளவு தடுப்பு பிரிவு, தனியாக செயல்படுகிறது. இந்த பிரிவினரின் வழக்கமான சோதனையில், விமானப் படையின் முக்கிய தகவல்கள், ஐ.எஸ்.ஐ.,க்கு பரிமாறப்படுவது தெரிந்தது.
கண்காணிப்பு : டில்லியில் உள்ள, விமானப் படை தலைமை அலுவலகத்தில் இருந்து, தகவல்கள் வெளியே செல்வதை கண்டறிந்த உளவு தடுப்பு பிரிவினர், இது தொடர்பாக, விமானப் படை உயரதிகாரிகளை உஷார்படுத்தினர். இதையடுத்து, டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர்.அப்போது, கேப்டனாக பணியாற்றும், அருண் மார்வாஹ், தடை விதிக்கப்பட்டுள்ள சில மின்னணு கருவிகளை, அலுவலகத்திற்கு எடுத்து வருவது தெரிந்தது. அவரிடம் சோதனையிட்ட போது, அவருக்கு வழங்கப்பட்ட பணியை தவிர, வேறு சில பணிகளையும், விபரங்களையும், அவர் சேகரித்தது தெரிந்தது. இதையடுத்து, ஜன., 31ல் அவரிடம், உளவு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது மொபைல் போன் சோதனையிடப்பட்டது. அதில், ஐ.எஸ்.ஐ., ஏஜன்டாக, மார்வாஹ் செயல்பட்டது உறுதியானது.விமானப் படை தொடர்பான தகவல்கள், படங்கள், விபரங்களை, 'வாட்ஸ் ஆப்' மூலம், பெண் ஒருவருக்கு, மார்வாஹ் அனுப்பி வந்துள்ளது தெரிந்தது. வழக்கு பதிவுபாக்., உளவு அமைப்பைச் சேர்ந்த அந்த பெண்ணுடன், 'பேஸ்புக்' மூலம், 2017 டிசம்பரில், மார்வாஹ் தொடர்பு ஏற்படுத்தி உள்ளார். மேலும், ஐ.எஸ்.ஐ., அமைப்பினருடன், மார்வாஹ், தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மார்வாஹிடம், ௧௦ நாட்கள் விசாரணை நடத்திய பின், இது பற்றி, டில்லி சிறப்பு பிரிவு போலீசாரிடம், விமானப் படையின் உளவு தடுப்பு பிரிவு அதிகாரிகள் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, மார்வாஹை கைது செய்தனர்.மேலும், மார்வாஹை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் அனுமதி கோரினர். இதையடுத்து, மார்வாஹை, ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, போலீசாருக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன்படி, மார்வாஹை, ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று, போலீசார் விசாரிக்கின்றனர்.இது தொடர்பாக, விமானப் படை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை