சிறார் நீதி சட்டத்தை அமல்படுத்த அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar

சிறார் நீதி சட்டத்தை அமல்படுத்த அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: குழந்தைகள் உரிமைகள் குழுவில், காலி இடங்களை நிரப்பும்படியும், சிறார் நீதி சட்டத்தை அமல்படுத்தும்படியும், மத்திய, மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
காலியிடங்கள் : சிறார் நீதிமன்ற சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்தக் கோரியும், குழந்தைகள் உரிமைகள் குழுவில், காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மதன் பி.லோகுர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு, நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவு: அனைத்து, சிறார் நல கமிட்டிகள், சிறார் நீதி வாரியங்களில், காலியாக உள்ள உறுப்பினர் இடங்கள் நிரப்பப்பட வேண்டும். இதில் ஏற்படும் தாமதம், குழந்தைகளின் நலனை வெகுவாக பாதிக்கும். இதை, நாம் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறார் நீதி சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். சிறார் நீதி சட்டங்கள் சிறப்பான முறையில் அமல்படுத்துவது தொடர்பாக, அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், வழக்கு நடவடிக்கைகளை தங்கள் மேற்பார்வையில் பதிவு செய்ய வேண்டும்.அனைத்து உயர் நீதிமன்றங்களும், சிறார்களுக்கு உகந்த நீதிமன்றங்களை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
நடவடிக்கை : மத்திய, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையும், மாநில அரசுகளும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனில், அனைத்து காலி இடங்களையும் நிரப்ப வேண்டும். இதற்கான பணியாளர்கள் போதுமான அளவில் இருக்கும்படி, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை