அமலாக்க அதிகாரிகள் சோதனை : வாத்ரா நண்பருக்கு சிக்கல்| Dinamalar

அமலாக்க அதிகாரிகள் சோதனை : வாத்ரா நண்பருக்கு சிக்கல்

Added : பிப் 10, 2018
Advertisement

புதுடில்லி: ராஜஸ்தான் மாநிலம், பிகானிரில் நடந்த நில மோசடி தொடர்பாக, காங்., முன்னாள் தலைவர், சோனியா மருமகன், ராபர்ட் வாத்ராவின் நண்பர் வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிகானிர் நகரில், 374 ஹெக்டேர் நிலம், முறைகேடாக போலியான பெயர்களில் பதிவு செய்யப்பட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில், சோனியா மருமகனும், பிரியங்காவின் கணவருமான, ராபர்ட் வாத்ராவுக்கு தொடர்புடைய, 'ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி' நிறுவனத்துக்கு, தொடர்பிருப்பது தெரிந்தது.
கைது : இது குறித்து, ராஜஸ்தான் அரசு, ஏற்கனவே விசாரணை நடத்தியது. பின், இந்த வழக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரிக்கிறது. இது தொடர்பாக, ஜெய்பிரகாஷ் பாரக்வா, அசோக்குமார் ஆகியோரை, அமலாக்கத் துறை அதிகாரிகள், 2017 டிசம்பரில் கைது செய்தனர். இவர்களில், அசோக்குமார், ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கமானவர் எனவும், வாத்ராவுக்கு சொந்தமான, ஸ்கைலைட் நிறுவனத்தில், அவர் பணியாற்றியதும் தெரிந்தது.இந்நிலையில், ஸ்கைலைட் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவரும், ராபர்ட் வாத்ராவின் நண்பருமான, மகேஷ் நாகர் என்பவர் வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர். ஹரியானா மாநிலம், பரீதாபாதில் உள்ள, மகேஷ் நாகர் வீட்டில், சோதனை நடத்திய அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.நெருங்கிய நட்புஇது பற்றி, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிகானிரில் நடந்துள்ள நில மோசடிக்கு, மகேஷ் நாகர் தான் மூளையாக செயல்பட்டு உள்ளார். இவரிடம் தான், அசோக் குமார் பணியாற்றி வந்துள்ளார். 'இவர்கள் இருவருமே, ராபர்ட் வாத்ராவின், நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளனர்' என்றனர். ஆனால், சோதனையில் சிக்கிய ஆவணங்களின் விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X