காப்பீடு திட்டத்தில் சேர முஸ்லிம்களுக்கு தடை| Dinamalar

காப்பீடு திட்டத்தில் சேர முஸ்லிம்களுக்கு தடை

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சஹாரன்பூர்: உ.பி.,யில், முஸ்லிம் மக்கள் ஆயுள் மற்றும் சொத்து காப்பீடு செய்வதற்கு, தாருல் உலமா தேவ்பந்த் அமைப்பு, 'பத்வா' எனும் தடை விதித்துள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்தாண்டு துவக்கத்தில், முஸ்லிம் பெண்கள், டிசைனர் மற்றும் இறுக்கமான பர்தா அணிவதற்கும், கால்பந்து போட்டியை பார்ப்பதற்கும், தாருல் உலமா அமைப்பு தடை விதித்தது.இந்நிலையில், முஸ்லிம் மக்கள், தங்கள் ஆயுள் மற்றும் சொத்துகளுக்கு காப்பீடு செய்வதற்கு, சஹாரன்பூரைச் சேர்ந்த, தாருல் உலமா அமைப்பு தடை விதித்துள்ளது.இது குறித்து, அந்த அமைப்பைச் சேர்ந்த, உலமா மவுலானா நாசிப் அஹமது மற்றும் மதரசா தலைவர், தாருல் நிஸ்வா கூறியதாவது:காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் லாபத்துக்காக காப்பீடு செய்ய வற்புறுத்துகின்றன. அவ்வாறு செய்யப்படும் காப்பீட்டின் மீதான வட்டியை, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. காப்பீட்டின் மூலம் கிடைக்கும் தொகை வட்டிக்கு சமமானது. வட்டி வாங்குவது, கொடுப்பது இரண்டும் இஸ்லாமியத்துக்கு எதிரானது. எனவே, முஸ்லிம் மக்கள் காப்பீடு செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-பிப்-201820:02:04 IST Report Abuse
Pasupathi Subbian இஸ்லாமிய சட்டப்படி,வட்டி வாங்குவதோ , வட்டிக்கு கொடுப்பதோ தவறு, அது சரி, இன்றைய நிலையில் வட்டிக்கு வாங்காதவர் யாரேனும் உள்ளனரா? இதில் மத பிரிவினை எங்கே வரும்.
Rate this:
Share this comment
Cancel
Nagai Nagarajan Swaminathan - Chennai,இந்தியா
10-பிப்-201810:34:16 IST Report Abuse
Nagai Nagarajan Swaminathan அப்போ முஸ்லீம்கள் யாரும் வாங்கிக்கணக்குகள் கூட தொடங்கக்கூடாதே? ஏனெனில் வங்கி சேமிப்புகள் அனைத்திற்கும் வட்டி கணக்கிடப்பட்டு வரிடத்திற்கிருமுறை வழங்கப்படுகிறதே? அதனால் வங்கிக்கணக்குகளும் தொடங்க கூடாது என்பார்களோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை