ராணுவ அமைச்சக செயலருக்கு மனித உரிமைகள் கமிஷன் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராணுவ அமைச்சக செயலருக்கு மனித உரிமைகள் கமிஷன் உத்தரவு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், ராணுவ வீரர்கள் மீது நடக்கும் கல்லெறி சம்பவங்கள், மனித உரிமை மீறல்கள் என, குற்றஞ்சாட்டி, ராணுவ வீரர்களின் மூன்று குழந்தைகள் அளித்த புகாரை ஆய்வு செய்த, தேசிய மனித உரிமைகள் கமிஷன், நான்கு வாரங்களில் பதில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ராணுவ செயலருக்கு உத்தரவிட்டு உள்ளது.இது குறித்து, தேசிய மனித உரிமைகள் கமிஷன், டில்லியில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ஜன., 27ல், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில், ராணுவத்தினர் மீது, விஷமிகள் கல்லெறிந்த சம்பவம் குறித்து, ராணுவ வீரர்களின் மூன்று குழந்தைகள், புகார் சமர்ப்பித்து உள்ளனர். அதில், 'ராணுவ வீரர்கள் மீது கல்லெறியும் சம்பவங்கள், மனித உரிமை மீறல்கள்' என, குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின்படி, இது தொடர்பான, உண்மை நிலை குறித்த அறிக்கையை, ராணுவ அமைச்சகத்தின் செயலர் மூலம் கேட்க வேண்டியது அவசியமாகிறது.இது குறித்து, ராணுவ அமைச்சக செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. நான்கு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, அவர் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை