பிரிட்டனில் கணக்கு போட்டி; இந்திய மாணவி சாதனை| Dinamalar

பிரிட்டனில் கணக்கு போட்டி; இந்திய மாணவி சாதனை

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிரிட்டன் கணக்கு போட்டி, இந்திய மாணவி  சோஹினி சாதனை,  Indian student Sohini achievement,ஆன் லைன் கணித புதிர் போட்டி, நெல்சன் ஆரம்பப் பள்ளி, Nelson primary school,  சோஹினி ராய் சவுத்ரி, இந்திய வம்சாவளி ,மாய்னக் ராய் சவுத்ரி,  Mayanak Roy Choudhury, British maths competition, online mathematical quiz competition, Sohini Roy Chowdhury, Indian origin,

லண்டன் : உலகளவில் நடைபெற்ற, 'ஆன் லைன்' கணித புதிர் போட்டியில், சிறப்பாக தேர்ச்சி பெற்ற, முதல், 100 பேரில் ஒருவராக, இந்திய வம்சாவளி மாணவி, சோஹினி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சோஹினி ராய் சவுத்ரி, 8. இவரது தந்தை, மாய்னக் ராய் சவுத்ரி, பிரிட்டனில் உள்ள, லண்டன் நகரில், கணக்கராக பணிபுரிகிறார். பல ஆண்டுகளாக, இவரது குடும்பம் பிரிட்டனில் வாழ்ந்து வருகிறது. இங்கு, பிர்மிங்கம் நகரில் உள்ள, நெல்சன் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் சோஹினி, கணக்கு பாடத்தில் ஆர்வம் கொண்டவர்.

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்காகவே, பிரிட்டனில், ஆன் லைன் கணித புதிர் போட்டி நடத்தப்படும். ஒரே நேரத்தில், உலகம் முழுவதிலும் இருந்து, மாணவர்கள் இதில் பங்கேற்பர். இணையம் மூலம், ஆன்லைனில் கேட்கப்படும் கடினமான கணித புதிர்களுக்கு, சரியாகவும், அதே நேரத்தில் விரைவாகவும் பதிலளிக்க வேண்டும்.

இந்த போட்டியில் பங்கேற்று, மின்னல் வேகத்தில் சரியான விடைகளை சொல்லி, உலகளவில் சிறந்த, 100 பேரில் ஒருவராக, சோஹினி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-பிப்-201815:43:15 IST Report Abuse
ஆரூர் ரங் மேற்பயிற்சிக்கு அணுகவும் சைனி & குமாரசாமி
Rate this:
Share this comment
Cancel
Chandru - bangalore,இந்தியா
10-பிப்-201812:49:54 IST Report Abuse
Chandru அது எந்த வலைப்பக்கம் னு சொன்ன இன்னும் நிறைய பேர் முயற்சி செய்வார்கள் செய்தியாளர்களே.
Rate this:
Share this comment
Cancel
VIJAIANC -  ( Posted via: Dinamalar Android App )
10-பிப்-201811:56:14 IST Report Abuse
VIJAIANC Congrats
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X