காந்தி பற்றிய தேர்வு : கைதிகள் சாதனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காந்தி பற்றிய தேர்வு : கைதிகள் சாதனை

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆமதாபாத் : குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2008ல், ஆமதாபாதில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட, இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த, சம்சுதீன் ஷேக், ஹசன் ரஜா, அயாஸ் சையது ஆகியோர் கைது செய்யப்பட்டு, சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆமதாபாதில், காந்தியடிகளால் துவக்கப்பட்ட நவஜீவன் அறக்கட்டளை பதிப்பகம், சிறை கைதிகளுக்கான, காந்தியடிகள் வரலாறு குறித்த தேர்வு நடத்தியது. குஜராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை, 85 கைதிகள் எழுதினர். தேர்வில், காந்தியடிகளின் ஒருங்கிணைந்த வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட, மூன்று புத்தகங்களின் அடிப்படையில், தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில், தொடர் வெடிகுண்டு தாக்குதல் குற்றவாளிகளான, சம்சுதீன் ஷேக், ஹசன் ரஜா, அயாஸ் சையது ஆகியோர், முதல் மூன்று இடங்களை பெற்றதாக, அறக்கட்டளை அதிகாரிகள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை