பெண்கள் பள்ளியில் பணி : ஆசிரியர்கள் கொந்தளிப்பு| Dinamalar

பெண்கள் பள்ளியில் பணி : ஆசிரியர்கள் கொந்தளிப்பு

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சண்டிகர்: பெண்கள் பள்ளியில், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களே, ஆசிரியர்களாக பணிபுரிய வேண்டும் என்ற, பஞ்சாப் அரசின் உத்தரவுக்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில், காங்., அரசு அமைந்துள்ளது. சமீபத்தில், மாநில கல்வித் துறை, ஓர் அறிவிப்பு வெளியிட்டது. அதில், '50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே, பெண்கள் பள்ளியில் பணியாற்றலாம்' என, கூறப்பட்டுள்ளது.இதற்கு, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. 'இந்த உத்தரவு, 50 வயதுக்கு உட்பட்ட ஆண் ஆசிரியர்கள், பெண்கள் பள்ளியில் பணியாற்றினால், பாதுகாப்பு இல்லை என்பது போல் அமைந்துள்ளது. 'இது, ஆசிரியர்கள் மீதான தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடும். அதனால், இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்' என, ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-பிப்-201820:04:22 IST Report Abuse
Pasupathi Subbian மாணவர்களின் மேல் ஆசிரியர்கள் பலர் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்துவருவதால் இந்த முடிவை அரசு எடுக்கவேண்டிய கட்டாயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை