2 நக்சல்கள் சுட்டு கொலை : சத்தீஸ்கர் போலீஸ் அதிரடி| Dinamalar

2 நக்சல்கள் சுட்டு கொலை : சத்தீஸ்கர் போலீஸ் அதிரடி

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், போலீசாருடனான துப்பாக்கிச் சண்டையில், பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இரு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில், நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அப்பகுதியில், இந்தோ - திபெத் எல்லை போலீசார், மாவட்ட ரிசர்வ் படை, மாவட்ட போலீஸ் மற்றும் ம.பி., போலீசார் இணைந்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, நக்சல் குழுவினருக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், நக்சலைட் இயக்கத்தின் துணைத் தலைவனான, மஹாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியைச் சேர்ந்த வினோத் மற்றும் பஸ்தார் மாவட்டத்தைச் சேர்ந்த, சாகர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்களில், வினோத்தின் தலைக்கு, எட்டு லட்சம் ரூபாயும், சாகரின் தலைக்கு, இரண்டு லட்சம் ரூபாயும் பரிசு வழங்கப்படும் என, மாநில போலீசார் அறிவித்திருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை