ஈரோடு- - பழநி ரயில் தடத்துக்கு, 'பச்சைக்கொடி' : மத்திய அரசு நிதி ஒதுக்கியும் தமிழக அரசு பாராமுகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு- - பழநி ரயில் தடத்துக்கு, 'பச்சைக்கொடி' : மத்திய அரசு நிதி ஒதுக்கியும் தமிழக அரசு பாராமுகம்

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்: ஈரோடு ---- பழநி புதிய ரயில்வே வழித்தடத்துக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், மாநில அரசு பாராமுகத்துடன் உள்ளதால், திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.ஈரோடு - -பழநி ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும் என, 1952 முதல் கோரிக்கை உள்ளது. 2011ல், இதற்கான சர்வே நடந்தது. மொத்தமுள்ள, 90 கி.மீ., சர்வே செய்யப்பட்டு, கையகப்படுத்த வேண்டிய நிலங்கள், ஆறு பாலங்கள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.மத்திய அரசு, இம்முறை பட்ஜெட்டில், ஈரோடு- --- பழநி ரயில்வே திட்டத்துக்காக, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.எனினும், மாநில அரசு இவ்விஷயத்தில் ஒத்துழைப்பு அளிக்காததால், திட்டம் தொடர்ந்து இழுபறியாகி வருகிறது.ஈரோடு- - பழநி ரயில்வே பணிச் சங்க தலைவர், லிங்கம் சின்னசாமி கூறியதாவது:பிரதான நகரங்கள், பல்வேறு மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கும் ரயில்வே வழித்தடமாக உள்ளது.ஆறு மாதங்களுக்கு முன்கூட, 1.5 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, மத்திய - மாநில அரசுகளிடம் மனு அளித்தோம்.திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு தயாராக இருந்தும், மாநில அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. நிலம் கையகப்படுத்தும்போது, அதற்கான நிதியில், 50 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும்.இத்திட்டத்தில், மொத்தமுள்ள, 90 கி.மீ.,யில், 20 கி.மீ., நீளத்துக்கு, அரசு நிலங்களாகும்; 70 கி.மீ., நீளத்துக்கு, மூன்று மாவட்ட கலெக்டர்களும் நிலம் எடுத்து, ரயில்வே துறைக்கு வழங்க, அரசு உத்தரவிட்டு, இழப்பீட்டு தொகை ஒதுக்க வேண்டும்.ஈரோடு- - பழநி ரயில்வே வழித்தடம் அமைப்பதற்கான நடவடிக்கையை, மாநில அரசு துவக்க வேண்டும். தமிழக, எம்.பி.,க்கள், ரயில்வே அமைச்சர், பிரதமரிடம், திட்டத்துக்கு கூடுதல் நிதி பெற முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-பிப்-201819:20:49 IST Report Abuse
Pasupathi Subbian இதற்க்கு நமது மக்கள் பிரதிநிதிகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள். அங்கே திமுகவை சாடுவதும், அதிமுகவில் உள்ள மற்ற பிரிவினரை சாடுவதும் , சம்பளம், மற்ற இத்யாதிகளை வசூலிப்பதும், மட்டுமே இவர்கள் செய்யும் சாதனை, மக்கள் ஓங்கி குரல்கொடுத்தால் மட்டுமே இவர்களுக்கு புத்தி வரும். சாதனை புரியவில்லை என்றால் மக்கள் இவர்களை மதிக்கவே கூடாது.
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
10-பிப்-201806:16:10 IST Report Abuse
ramasamy naicken கோடிக்கணக்கில் கொட்டப்பட்டு முடிக்கப்பட்ட தாம்பரம் முனையமும், சென்னை டு திருச்சி இரட்டை பாதையும் முடங்கி கிடக்கின்றன. அதே மாதிரி சேலம் - கரூர், மதுரை - பொள்ளாச்சி, திண்டிவனம் டு வேலூர் தடம்களில் தினமும் ஒன்றோ அல்லது இரண்டு ரயில்கள் ஓடுகின்றன. இதெற்கு எதற்கு நம் வரிப்பணத்தை வீண் அடித்தார்கள் தெரியாமல் முழித்து கொண்டு இருக்கின்றோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை