ரூ.30 ஆயிரம் திருட்டு : கல்லூரி மாணவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.30 ஆயிரம் திருட்டு : கல்லூரி மாணவர் கைது

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓமலுார்: தொழிலாளியின், ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, பணம் திருடிய, பாலிடெக்னிக் மாணவரை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், சிக்கனம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல், 50; கூலித்தொழிலாளி. ஜன., 22ல், ஓமலுார் ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்.,மில், பணம் எடுக்க வந்தார். அப்போது, அவருக்கு உதவுவதாக, ஒரு இளைஞர், மிஷினில் கார்டை நுழைத்து, 30 ஆயிரம் ரூபாய் பதிவு செய்தார். ஆனால், பணம் வரவில்லை என, தங்கவேலிடம் கூறி, வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி, அனுப்பி விட்டார். பின், பதிவு செய்த பணத்தை எடுத்து, அங்கிருந்து இளைஞர் மாயமானார்.தங்கவேல், பணம் வரவில்லை எனக் கூறியதால், வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம்., மையத்தில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பணத்தை இளைஞர் எடுத்து செல்வது தெரிந்தது. ஓமலுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.நேற்று காலை, அதே மையத்துக்கு வந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், 18 வயதான அவர், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வருவது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X