தஞ்சை தனியார் பல்கலையில் தெலுங்கானா மாணவி கடத்தல்?| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தஞ்சை தனியார் பல்கலையில் தெலுங்கானா மாணவி கடத்தல்?

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சை அருகே, மாயமான தனியார் பல்கலை மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சீனிவாச ரெட்டி. இவரது மகள் முக்குடி ஹேமா ரெட்டி, 18; தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலையில், முதலாம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறார். பல்கலை விடுதியில் தங்கியிருந்தார்.தஞ்சையைச் சேர்ந்தவர் காவ்யா, 18. இவரும், அதே பல்கலையில் படித்து வருகிறார். ஹேமா, காவ்யா இருவரும் நண்பர்கள். பல்கலையில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விடுமுறை விட்டால், ஹேமா விடுதியில் இருந்து புறப்பட்டு, தஞ்சையில் உள்ள காவ்யா வீட்டில் தங்குவார்.பல்கலைக்கு, நேற்று முதல், மூன்று நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. ஹேமா, நேற்று முன்தினம், காவ்யாவை தொடர்பு கொண்டு, அவர் வீட்டிற்கு வருவதாக கூறினார். ஆனால், நேற்று காலை வரை தோழியின் வீட்டிற்கு அவர் செல்லவில்லை.சந்தேகம் அடைந்த காவ்யாவின் தந்தை, ஹேமா மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.பல்கலை விடுதியை தொடர்பு கொண்ட போது, ஹேமா, நேற்று முன்தினம் மாலை, திருச்சியில் இருந்து வந்த கால் டாக்சியில் ஏறி சென்றதாக கூறினர்.காவ்யாவின் தந்தை, நேற்று வல்லம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹேமா கடத்தி செல்லப்பட்டாரா அல்லது வேறு யாருடனாவது சென்று விட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை