சென்னை ரவுடிகள் திருப்பூரில் பதுங்கல்?| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை ரவுடிகள் திருப்பூரில் பதுங்கல்?

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: சமீபத்தில், சென்னை பூந்தமல்லி அருகே, நுாற்றுக்கணக்கான ரவுடிகள் திரண்டு, பினு என்ற ரவுடியின் பிறந்த நாளை கொண்டாடினர். போலீசார் சுற்றிவளைத்து, 76 பேரை பிடித்தனர். சிலர் தப்பியோடினர்.தப்பியவர்களில் முக்கிய ரவுடிகளான பினு, கனகராஜ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கென, ஆறு தனிப்படைகள் அமைத்து, தமிழகம் மற்றும் கேரளாவுக்கு விரைந்துள்ளனர். இதில் ஒரு தனிப்படை, நேற்று ஈரோடு வந்தது. பின், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளுக்கு சென்று சோதனையிட்டது.ஏற்றுமதி மற்றும் பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூரில், பல லட்சம் பேர் வசிக்கின்றனர். வேலைவாய்ப்பு நிறைந்த பகுதி என்பதால், பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தினமும், திருப்பூர் வருவது, வீடுகளில் குடியேறுவது, நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது; திரும்ப செல்வது என, சகஜமாக நடக்கிறது.இதை பயன்படுத்தி, சென்னையில் தப்பிய ரவுடிகள், திருப்பூரில் பதுங்க வாய்ப்புள்ளதாக போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து, திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, இங்குள்ள ரவுடிகள் மற்றும் சமூக விரோத நபர்கள், சென்னையில் தொடர்பு வைத்துள்ள நபர்களையும், போலீசார் கண்காணிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X