கோவை, ஈரோடு ஜவுளி கடைகளில், 'ரெய்டு'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை, ஈரோடு ஜவுளி கடைகளில், 'ரெய்டு'

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கோவை, ஈரோடு ஜவுளி கடைகளில், 'ரெய்டு'

கோவை : கோவையில் உள்ள பரணி பட்டு சென்டரில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவையில், பரணி பட்டு சென்டர் என்ற துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கடையின் ஷட்டர்வுகள் இழுத்து மூடப்பட்டு, வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டனர்.கடை ஊழியர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல, ஈரோட்டில் செயல்பட்டு வரும் பரணி பட்டு சென்டரிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மாலை வரை சோதனை : ஈரோட்டில், பரணி சில்க்ஸ், பரணி பட்டு சென்டர், பரணி ரெடிமேட்ஸ், மோத்தி சூட்டிங்ஸ், மங்கை நைட்டீஸ், மலர் சில்க்ஸ், கலா மந்திர் ஆகிய, ஏழு முன்னணி ஜவுளிக்கடைகள் உள்ளன.இந்த கடைகளில், நேற்று காலை, 10:30 மணிக்கு, ஐந்துக்கும் மேற்பட்ட கார்களில் வந்த, 35 வருமான வரித் துறை அதிகாரிகள், ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்தனர்.
பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, கடையின் பாதி ஷட்டரை இறக்கி, சோதனை நடந்தது. மாலை வரை, சோதனை நீடித்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை