16ல் பாம்பன் பாலம் முற்றுகை : 6 மாவட்ட மீனவர்கள் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

16ல் பாம்பன் பாலம் முற்றுகை : 6 மாவட்ட மீனவர்கள் முடிவு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகப்பட்டினம்: வரும், 16ம் தேதி, பாம்பன் பாலத்தை முற்றுகையிடுவது என, ஆறு மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்ட மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், நாகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள மீன்பிடி சட்ட மசோதாவை கண்டிப்பதுடன், திரும்பப் பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.டீசல் விலையேற்றத்தால், மீன் பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், டீசலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.கடந்த, 2014ம் ஆண்டில் இருந்து, இலங்கை படையால் சிறை பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்படாத, 127 மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள, 150 விசைப்படகுகளை திரும்ப பெற்றுத் தரவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 16ம் தேதி, பாம்பன் பாலத்தை, ஆறு மாவட்ட மீனவர்கள் முற்றுகையிடுவோம். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து, 16ம் தேதி முடிவு செய்யப்படும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை