மருந்தகங்களில் ரூ.66 லட்சம் கையாடல் : பெண் ஊழியர் உட்பட 3 பேர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருந்தகங்களில் ரூ.66 லட்சம் கையாடல் : பெண் ஊழியர் உட்பட 3 பேர் கைது

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: கூட்டுறவு மருந்தகங்களில், 65.64 லட்சம் ரூபாயை கையாடல் செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்ட, நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ், கற்பகம் மருந்து கடைகள் மற்றும் அரசு கூட்டுறவு மருந்து கடைகள் - அம்மா மருந்தகம் செயல்பட்டு வருகின்றன. இங்கு, பணம் கையாடல் நடப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து, மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை துணை பதிவாளர், விசாரணை நடத்தினார். அதில், 2014, 2015 - 2016 மற்றும், 2017ம் ஆண்டு, மருந்து கொள்முதல் செய்ததாக பொய்யான ஆவணங்கள் தயாரித்து, 47.75 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.இதேபோல், திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, அம்மா மருந்தகத்தில், 2015 முதல், 2017 வரை, இருப்பு குறைப்பு தொகை மூலம், 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து, துணை பதிவாளர் மாதவி, சென்னை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு, எஸ்.பி., செந்தில்குமாரிடம், கடந்த வாரம் புகார் செய்தார்.அவரது உத்தரவின்படி, திருவண்ணாமலை வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, ஊழியர் ரவீந்திரன், 29, விற்பனையாளர் ராபியா, 41, மற்றும் மருந்தாளுனர் மகேஸ்வரி, 37, ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.தலைமறைவாக உள்ள, கற்பகம் மருந்து கடை மருந்தாளுனர் துரையை, 34, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X