ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சி திருப்பூரில் இன்று நிறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சி திருப்பூரில் இன்று நிறைவு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், 'இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்' மற்றும், 'நிப்ட்-டீ' கல்லுாரி சார்பில், ஜவுளி ஆராய்ச்சியாளர் சந்திப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி, அவிநாசி- பழங்கரை ரோட்டில் உள்ள, ஐ.கே.எப்., வளாகத்தில், நேற்றுதுவங்கியது.தமிழக கைத்தறி, ஜவுளித் துறை முதன்மை செயலர் பனீந்தர் ரெட்டி, திறந்து வைத்தார். கோவை தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் - சிட்ரா, மும்பை ஜவுளி ஆராய்ச்சி கழகம் - பிட்ரா உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள், மத்திய பட்டு வாரியம் என, பல்வேறு அமைப்பினர், 26 அரங்குகளில், ஜவுளித் துறை சார்ந்த கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.மறு சுழற்சியில் தயாரிக்கப்பட்ட நுாலிழைகள், துணிகளின் மடியும் தன்மையை மிக நுட்பமாக ஆய்வு செய்யும் மெஷின், இயற்கைப்பொருளில் தயாரிக்கப்பட்ட சாயங்கள், மதிப்பு கூட்டு ஆடை ரகங்கள், மருத்துவ ஜவுளி என, புது வகை ஜவுளி ரகங்கள் இடம்பெற்றுள்ளன.டெக்ஸ்டைல் கமிட்டி உறுப்பினர் செயலர், அஜித் சவான் பேசுகையில், “விவசாயத்துக்கு அடுத்து, அதிக வேலை வாய்ப்பு வழங்குவது, ஜவுளித் துறை. நாட்டின், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி - ஜி.டி.பி.,யில், ஜவுளித் துறையின் பங்களிப்பு, 4 சதவீதம். மொத்த ஏற்றுமதியில், ஜவுளிப் பொருட்களின் பங்களிப்பு, 14 சதவீதம்.''தற்போது, உள்நாட்டு, ஏற்றுமதி என, மொத்த ஜவுளி வர்த்தகம், 6.91 லட்சம் கோடியாக உள்ளது. இந்த வர்த்தகத்தை, 2021ல், 20 லட்சம் கோடியாக உயர்த்துவதே லட்சியம்,'' என்றார்.கண்காட்சி இன்று மாலை, 5:30 மணிக்கு நிறைவடைகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை