கோவை வழியாக ஐதராபாத் சிறப்பு ரயில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவை வழியாக ஐதராபாத் சிறப்பு ரயில்

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை: பயணியரின் தேவைக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து, ஏப்., 5, 12, 19, 26ம் தேதிகளிலும், மே, 3, 10, 17, 24, 31 மற்றும் ஜூன், 7, 14, 21, 28ம் தேதிகளில் ஐதராபாதுக்கு கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.எர்ணாகுளத்தில் இருந்து இரவு, 9:45 மணிக்கு புறப்படும் ரயில், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பதி, ரேணிகுண்டா, குண்டூர் வழியாக மறுநாள் இரவு, 10:55 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது. இத்துடன், இரண்டடுக்கு, 'ஏசி' வகுப்பு பெட்டி ஒன்று, மூன்றடுக்கு, 'ஏசி' வகுப்பு பெட்டி ஒன்று, 16 துாங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை