திருச்சி விமான நிலைய ஊழியரிடம் 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி விமான நிலைய ஊழியரிடம் 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியரிடம், 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சி வழியாக சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 7ம் இரவு, திருச்சி அருகே சமயபுரம் பைபாஸ் ரோட்டில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியே வந்த காரில் இருந்த ஹாஜி முகம்மது, 26, என்பவர் தங்கம் கடத்தலில் தொடர்புடையவர் என்பது தெரிந்தது. அவரது தகவலின் அடிப்படையில், திருச்சி குண்டூரில் உள்ள அங்கமுத்து, 28, என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.அங்கு, 1 கிலோ கட்டிகளாக, 6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அங்கு தங்கியிருந்த, விமான நிலைய தற்காலிகஊழியர் லாரன்ஸ், 28, அங்கமுத்து, ஹாஜி முகம்மது ஆகியோரை கைது செய்தனர்.வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம், திருச்சி விமான நிலைய கழிப்பறைகளில் வைக்கப்படும். அங்கிருந்து, கழிப்பறை சுத்தம் செய்யும் பொருட்களுடன், லாரன்ஸ் வெளியே எடுத்து வந்து, அங்கமுத்துவிடம் கொடுத்து விடுவார்.அவற்றை சென்னையைச்சேர்ந்த சிலரிடம், அங்கமுத்து கொடுத்து விடுவார். இதற்காக, லாரன்சுக்கும், அங்கமுத்துவுக்கும் லட்சக்கணக்கில்பணம் கமிஷனாக கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், சில ஆண்டுகளாக, இந்த கடத்தல் தங்கம் கைமாற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
10-பிப்-201807:14:45 IST Report Abuse
Amirthalingam Sinniah இச்செயலால் கழிப்பறையிலும் கமறாக்கள் பொருத்தவேண்டிய நிலை ஏட்படபோகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X