கு.மா.வா., ஒதுக்கீடு பெறாதவர் காலி செய்ய ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கு.மா.வா., ஒதுக்கீடு பெறாதவர் காலி செய்ய ஐகோர்ட் உத்தரவு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:குடிசை மாற்று வாரிய இடத்தில், ஒதுக்கீடு பெறாமல் வசிப்பவரை, காலி செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம், சேலையூர், பாரத் நகரில், சாமுண்டீஸ்வரி என்பவருக்கு, குடிசை மாற்று வாரிய நிலம் ஒதுக்கப்பட்டது. ௧௯௯௩ல் ஒதுக்கப்பட்ட, இந்த நிலத்துக்கான விலையை, தவணைகளில் செலுத்தினார். இருந்தும், அவருக்கு விற்பனை பத்திரத்தை, வாரியம் வழங்கவில்லை.
நிலத்தில், காளீஸ்வரன் என்பவர், கட்டுமானம் செய்திருப்பதாகவும், அவரை காலி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டும், குடிசை மாற்று வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சாமுண்டீஸ்வரி மனு தாக்கல் செய்தார்.

காளீஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், 'சாமுண்டீஸ்வரிக்கு ஒதுக்கிய நிலத்தை, எனக்கு விற்றுவிட்டார். அந்த இடத்தில், வீடு கட்டி வசித்து வருகிறேன்' என கூறப்பட்டுஉள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி, வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

சொத்துக்கு உரிமை கோர, காளீஸ்வரனுக்கு தகுதியில்லை. நிலத்துக்கான விலையை முழுமையாக செலுத்தியும், சாமுண்டீஸ்வரி துாங்கிக் கொண்டிருந்தது ஏன் என்பது தெரியவில்லை.
நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், சாமுண்டீஸ்வரிக்கு, விற்பனை பத்திரத்தை, குடிசை மாற்று வாரியம் வழங்க வேண்டும்.

சட்டப்பூர்வ தடை ஏதும் இல்லை என்றால், 45 நாட்களில் வழங்க வேண்டும். நிலம் தொடர்பாக, காளீஸ்வரனிடம் பணம் பெற்றிருந்தால், 15 நாட்களுக்குள், சாமுண்டீஸ்வரி திருப்பித்தர வேண்டும்.ஜூன், 15க்குள், இட த்தை, காலி செய்ய வேண்டும். இல்லையென்றால், போலீஸ் உதவியுடன், அவரை வெளியேற்ற வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை