கார், லாரி மோதி விபத்து மதுரை அருகே 3 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார், லாரி மோதி விபத்து மதுரை அருகே 3 பேர் பலி

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரை அருகே காரும், லாரியும் மோதியதில், மூன்று பேர் இறந்தனர்.திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா சிவகுமார், 36; லாரி வாங்கி விற்கும் புரோக்கர். இவர், 42 - 49 வயதுடைய நண்பர்கள் இருவருடன், லாரி வாங்குவதற்காக, ரெங்கசாமி, 60, என்பவரது டவேரா காரில், மதுரை, திருமங்கலம் நோக்கி சென்றார்; ரெங்கசாமி ஓட்டினார்.நேற்று அதிகாலை, 1:15 மணிக்கு, மதுரை, துவரிமான் கண்மாய் அருகே, நான்கு வழிச்சாலையில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனை கடந்து, எதிர் திசையில் சென்று, திருமங்கலத்தில் இருந்து வந்த லாரி மீது மோதியது.இதில், ரெங்கசாமி, நண்பர்கள் இருவர் என, மூவரும் பலியாயினர். படுகாயமடைந்த ராஜா சிவகுமார், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை