தொழிற்சங்கத்தினருடன் 24ல் மத்தியஸ்தர் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்சங்கத்தினருடன் 24ல் மத்தியஸ்தர் பேச்சு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன், வரும், 24ல், ஓய்வுபெற்ற நீதிபதி, பத்மநாபன் மீண்டும் பேச்சு நடத்த உள்ளார்.அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான, 13வது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்க்க, சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி, பத்மநாபனை, மத்திஸ்தராக நியமித்து உத்தரவிட்டது. அவர், 46 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களை, நேற்று அறிமுக பேச்சுக்கு அழைத்திருந்தார். இது தொடர்பான சந்திப்பு, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் நடந்தது.இந்த சந்திப்பின் போது, 'வரும், 16ம் தேதிக்குள், தொழிற்சங்கத்தினர், ஊதிய உயர்வு சார்ந்த, தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அரசின் விளக்கத்தை, 23ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார். பின், அடுத்தகட்ட விசாரணை, வரும், 24ல் நடக்கும் என்றும் அறிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை