விசாரணை கமிஷன் பதவி காலம் நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விசாரணை கமிஷன் பதவி காலம் நீட்டிப்பு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த, முறைகேடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட, விசாரணை கமிஷனின் பதவிக்காலம், மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை, அண்ணா சாலையில் உள்ள, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், சட்டசபை வளாகத்துடன் கூடிய, புதிய தலைமைச் செயலகம், தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது. அடுத்து, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியது.அத்துடன், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி, தங்கராஜ் தலைமையில், 2011 ஜூனில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதே ஆண்டு, தங்கராஜ் விலக, நீதிபதி, ரகுபதி நியமிக்கப்பட்டார்.இந்த கமிஷனின் பதவிக்காலம், ஜன., 22ல், நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, கமிஷனின் பதவிக் காலத்தை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X