தமிழக நிலக்கரி தேவை : மத்திய அரசிடம் அறிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக நிலக்கரி தேவை : மத்திய அரசிடம் அறிக்கை

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தமிழகத்திற்கு தேவைப்படும், நிலக்கரி குறித்த அறிக்கையை, மத்திய அரசிடம் மின் வாரியம் வழங்கியுள்ளது. மின் வாரியத்திற்கு, 4,320 மெகாவாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் பயன்படுத்த, தினமும் சராசரியாக, 75 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. அவை, மத்திய அரசின், 'கோல் இந்தியா' நிறுவனத்திற்கு சொந்தமான, ஒடிசா, மேற்கு வங்கம், தெலுங்கானா மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. இந்த சுரங்கங்களில் இருந்து, தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ள முழு நிலக்கரியும் அனுப்பப்படுவதில்லை.இந்நிலையில், டில்லியில், மத்திய நிலக்கரி அமைச்சகம், நிலக்கரி பங்கீடு தொடர்பாக, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில மின் வாரிய அதிகாரிகளிடமும், நேற்று ஆலோசனை நடத்தியது. அதில், மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்று, வரும் மாதங்களில், தமிழகத்திற்கு தேவைப்படும் நிலக்கரி குறித்த அறிக்கையை வழங்கியுள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
10-பிப்-201806:19:55 IST Report Abuse
ramasamy naicken உலகம் முழுவதும் நிலக்கரி மின் நிலையங்களை மூடி, offshore windmills , லித்தியம் அய்யன் பாட்டரி ஸ்டோரேஜ் என்று முன்னேறி கொண்டு இருக்கையில், இங்கே நிலக்கரியை எரித்து, சுற்றுப்புற சூழ்நிலையை நாசம் செய்து காசு பண்ணினால் போதும் என்று நினைக்கும் அரசியல்வியாதிகள், அதிகாரிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை