பாரதியார் பல்கலையில் 11 மணி நேரம் சோதனை : கட்டு, கட்டாக ஆவணங்கள் சிக்கின| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாரதியார் பல்கலையில் 11 மணி நேரம் சோதனை : கட்டு, கட்டாக ஆவணங்கள் சிக்கின

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி பணிக்காலத்திலும், அதற்கு முன் துணைவேந்தராக இருந்தவர்கள் காலத்திலும், பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்றது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார், பல்கலையில் சோதனையை துவங்கினர்.நேற்று அதிகாலை, 3:00 மணி வரை, தொடர்ந்து, சோதனை நடத்தினர். சோதனைக்கு பின், கட்டு கட்டாக சிக்கிய ஆவணங்களை, லஞ்ச ஒழிப்பு துறை வாகனத்தில் எடுத்து சென்றனர். துணைவேந்தர் அறையை சோதனையிட்டு, பணி நியமனம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்த்த போது, முறைகேடுகள் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.கணபதியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது, நேற்றைக்கே அனுமதி கிடைத்து விடும் என போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால், லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட் நீதிபதி விடுமுறை காரணமாக, வரும், 12க்கு ஒத்திவைக்கப்பட்டது.காவல் அனுமதி கிடைத்த பிறகு, சிக்கிய ஆவணங்கள், ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு கணபதியிடம் விசாரிக்க, திட்டமிட்டு உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
10-பிப்-201807:03:09 IST Report Abuse
ramasamy naicken ஐயா உங்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும், கையோடு தமிழ்நாடு மருத்துவ பல்கலைகழகத்திலும், துணை வேந்தர் கீதா லட்சுமி அலுவலகம், வீடுகளிலும் சோதனை நடத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை