அமெரிக்காவில் இந்தியர் சுட்டு கொலை | Dinamalar

அமெரிக்காவில் இந்தியர் சுட்டு கொலை

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவின், ஜார்ஜியா மாகாணத்தில், மர்ம நபர், கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவில், ஜார்ஜியா மாகாணத்தில், குடும்பத்தினருடன் வசித்து வந்த, பிரேம்ஜித் சிங், 44, அங்குள்ள கடைக்கு சென்றிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு தப்பியோடினான். இதில், படுகாயமடைந்த பிரேம்ஜித் சிங் உயிரிழந்தார். பின், அருகில் உள்ள மற்றொரு கடைக்கு சென்ற அந்நபர், அந்த கடையில் வேலை செய்யும் இந்தியர், பார்த்தி படேலை, 30, துப்பாக்கியால் சுட்டு, கடையில் இருந்த பணத்தை எடுத்து தப்பியோடினான். இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், லாமர் ரஷத் நிகல்சன், 28, என்பவனை, சந்தேகத்தின்படி கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandru - bangalore,இந்தியா
10-பிப்-201812:51:30 IST Report Abuse
Chandru வெளியுறவு துறை அமைச்சர் கருத்து சொல்ல விரும்புகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X