பார் கவுன்சில் தேர்தலில் 'நோட்டா' : பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பார் கவுன்சில் தேர்தலில் 'நோட்டா' : பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில், 'நோட்டா' வசதி கோரிய மனுவை, சிறப்பு குழு பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் எஸ்.ஆறுமுகம் தாக்கல் செய்த மனு: சட்டசபை, பார்லிமென்ட் தேர்தலில், வேட்பாளர்கள் யாருக்கும் வாக்காளர்கள் ஓட்டளிக்க விருப்பமில்லை என்றால், அந்த ஓட்டுக்களை பதிவு செய்ய, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 'நோட்டா' வசதி உள்ளது. அத்தகைய வசதி, பார் கவுன்சில் தேர்தலில் இல்லை. தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, மார்ச், ௨௮ல் தேர்தல் நடக்க உள்ளது. யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாத, 'நோட்டா' வசதியை அளிக்கும்படி, பார் கவுன்சிலுக்கு மனு அளித்தேன். அதை பரிசீலித்து, நோட்டா வசதியை அளிக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், நமோ நாராயணன் ஆஜரானார். மனுதாரர் அளித்த மனுவை, பார் கவுன்சிலை நிர்வகிக்கும் சிறப்பு குழு பரிசீலிக்கும்படி, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை