நீதிமன்ற வளாகத்தில், 'லந்து' : எச்.ராஜா சகோதரர் அதிரடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற வளாகத்தில், 'லந்து' : எச்.ராஜா சகோதரர் அதிரடி

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நீதிமன்ற வளாகத்தில், 'லந்து' : எச்.ராஜா சகோதரர் அதிரடி

திருச்சி: முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான, எச்.ராஜாவின் சகோதரர், பத்திரிகையாளர்களிடம் எரிந்து விழுந்ததுடன், ஒருவரை தாக்கவும் செய்தார்.கடந்த, 2006 - 11, தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் நேரு. இஇந்த கால கட்டத்தில், போக்குவரத்து கழகங்களின் வருவாய், 32.84 லட்சம் ரூபாயை, அமைச்சர் நேரு, கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜு உள்ளிட்ட, 19 பேர் முறைகேடு செய்ததாக, கோவிந்தராஜன் என்பவர், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.விசாரணையின் முடிவில், நேரு உள்ளிட்ட, 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், வழக்கில் இருந்து நேரு பெயர் நீக்கப்பட்டது. வழக்கில் சிக்கிய ராஜு இறந்து விட்டார். மேலும், நான்கு பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
திருச்சியில் நேற்று, லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட, 21 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. வழக்கில் சிக்கிய சுந்தர், 59, என்பவர், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜாவின் சகோதரர். கும்பகோணம் கோட்டத்தில் கணக்கு பிரிவு அதிகாரியாக பணியாற்றினார். புகாரில் சிக்கியதால், ஓய்வுக்கு ஒரு நாள் முன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.நேற்று இவர், நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, பத்திரிகை போட்டோ கிராபர்கள் அவரை படம் எடுக்க முயன்றனர். அப்போது, அவரது பெயரையும் கேட்டனர். அதற்கு அவர் ஆவேசத்துடன், ''என் பெயர் எடப்பாடி,'' என கூறியதுடன், ஒரு போட்டோ கிராபரை தாக்கி விட்டு வேகமாக, அங்கிருந்து சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
10-பிப்-201812:41:24 IST Report Abuse
balakrishnan ஊழலையும் செய்துட்டு கொழுப்பு, எதுக்கு இவரோட பேரை கேட்டால், எடப்பாடி பெயரை சொல்லவேண்டும், இவரை உள்ளேவிட்டு போலீஸ் கவனிப்பு கவனிக்கவேண்டும், ஒரே அடாவடிக்குடும்பம் போல இருக்கு,
Rate this:
Share this comment
R.Arul - Lusaka,ஜாம்பியா
10-பிப்-201819:31:53 IST Report Abuse
R.Arulபா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜாவின் சகோதரர். கும்பகோணம் கோட்டத்தில் கணக்கு பிரிவு அதிகாரியாக பணியாற்றினார். புகாரில் சிக்கியதால், ஓய்வுக்கு ஒரு நாள் முன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.- முட்டாளுக்கு கூட புரியும் வழக்கில் சிக்கிய சுந்தர், 59, என்பவர் சிக்கவைக்கப்பட்டார் என்பதை ............................
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
10-பிப்-201805:54:44 IST Report Abuse
Bhaskaran இதற்கு தமிழிசை என்ன சப்பைக்கட்டு காட்டுவாரோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X