ரூ.1.25 கோடி மோசடி செய்த பெண் : கைது செய்தது பஞ்சாப் போலீஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.25 கோடி மோசடி செய்த பெண் : கைது செய்தது பஞ்சாப் போலீஸ்

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: பஞ்சாப் மாநிலத்தில் 1.25 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான பெண்ணை மதுரையில் அம்மாநில போலீசார் கைது செய்தனர்.மதுரை அருகே உறங்கான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 50. இவர் சில ஆண்டுகளுக்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் 1.25 கோடி ரூபாய் வரை சொத்து மோசடி செய்துவிட்டு மதுரைக்கு தப்பிவந்தார். அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு அம்மாநில நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதைதொடர்ந்து 2 பெண் போலீசார் உட்பட 3 பேர், நேற்று காலை மதுரை வந்தனர். உறங்கான்பட்டி, அச்சம்பத்து உள்ளிட்ட இடங்களில் தேடினர்.இறுதியாக கே.கே.நகர் சுப்பையா காலனியில் உள்ள ஒரு வீட்டில் கலைச்செல்வி பதுங்கி இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்தபோது, தனக்கு உடல்நலம் சரி இல்லை என்றார். அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தனர். பின்னர் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, பஞ்சாப் அழைத்துச்சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
10-பிப்-201807:05:36 IST Report Abuse
ramasamy naicken ஒரு ஆயிரம் கோடி அடித்துவிட்டு லண்டனுக்கு தப்பி செல்ல தெரியவில்லை. மோசடி செய்கிறாளாம் மோசடி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை