பாம்பன் கடலில் சுவாமி சிலைகள் இலங்கைக்கு கடத்தலா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பன் கடலில் சுவாமி சிலைகள் இலங்கைக்கு கடத்தலா

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 பாம்பன் கடலில் சுவாமி சிலைகள்  இலங்கைக்கு கடத்தலா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் கிடந்த சுவாமி, அம்மன் சிலைகளை மீனவர்கள் மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பாம்பன் ரயில் பாலம் கிழக்கு நுழைவு கடற்கரை அருகில் பித்தளை, அலுமினியம், இரும்பு மூலப்பொருளில் உருவான சுவாமி, அம்மன் உள்ளிட்ட 15 சிலைகள் 3 முதல் 6 அங்குல உயரத்தில் கிடந்தது. நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், கடற்கரையில் கிடந்த சிலைகளை மீட்டு மண்டபம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இந்த சிலைகளை பாம்பனில் இருந்து கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்தி செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்ட போது, பாதுகாப்பு படையின் ரோந்து படகை கண்டதும் கடற்கரையில் துாக்கி வீசி சென்றிருக்கலாம் என உளவு போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10-பிப்-201810:22:12 IST Report Abuse
A.George Alphonse Why these Gods not punished the culprits who were smuggled them for their personnel gain.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை