மீனாட்சி அம்மன் கோயிலில் துறவியர் ஆய்வு : பக்தர் பேரவை துவக்க முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயிலில் துறவியர் ஆய்வு : பக்தர் பேரவை துவக்க முடிவு

Updated : பிப் 10, 2018 | Added : பிப் 10, 2018 | கருத்துகள் (2)
Advertisement
மீனாட்சி அம்மன் கோயிலில் துறவியர் ஆய்வு : பக்தர் பேரவை துவக்க முடிவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை துறவியர்கள் நேற்று ஆய்வு செய்தனர். கோயில் நிர்வாகத்திற்கும், பக்தர்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்த 'அன்னை மீனாட்சி பக்தர் பேரவை' அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.இக்கோயிலில் தீவிபத்தால் சேதம் அடைந்த பகுதிகளை நேற்று தமிழக இந்து துறவியர் பேரவையின் மதுரை மண்டல துறவியர்கள் ஆய்வு செய்தனர். இதில் சின்மயா மிஷன் சிவயோகானந்தா, தத்துவானந்தா ஆசிரமம் சமானந்தா, குற்றாலம் விவேகானந்தா ஆசிரமம் அகிலானந்தா, சங்கரன்கோவில் ராகவானந்தா, திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி நியமானந்தா, அத்யாமானந்தா, திண்டுக்கல் விவேகானந்தா சேவாஸ்ரமம் மகேஷ்வரானந்தா, மதுரை ராமகிருஷ்ண மடம் நாராயணந்தா, கருமாத்துார் விவேகானந்தா சேவாஸ்ரமம் ஸதாசிவானந்தா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.தீ விபத்திற்கு பின் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, கோயில் நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோயில் கடைகளை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தினர். 'கோயில் நிர்வாகங்களில் துறவியரையும், இந்துமத தலைவர்களையும் இணைக்க வேண்டும்' என தெரிவித்தனர். மேலும், 'அன்னை மீனாட்சி பக்தர் பேரவை' அமைப்பை உருவாக்கி கோயில் நிர்வாகத்திற்கும், பக்தர்களுக்கும் நல்லுறவை வளர்க்க முடிவு செய்தனர்.
தீயே உனக்கொரு கேள்வி
வீரா... வசந்தராயா!இப்படி ஆகுமென்று நினைத்தாகட்டினாய் அழகு மண்டபத்தை!தீயே,வீரன் வசந்தனின் கலை அழகைகொலை செய்ய ஏன் துணிந்தாய்?ஆள் அரவமில்லா வேளையில்உன் வேலையை காட்டிவிட்டாய்கடைகளால் மறைத்ததுதான் உன் கோபமா?ஆலவாய் அண்ணலின் ஆலயம் பற்றிஅகிலமே பேச துவங்கியதால்பொறுக்காமல் பொசுக்கி விட்டாயா?அனலே... தீயே ... அக்னி குஞ்சே ...உனக்கொரு விதிவகை இல்லையாஇனியொரு விதி செய்வோம் என்பார்கள்விதிகளை மதிக்கும் மனிதர்கள் எங்கே?கண்டிப்பும், கண்காணிப்பும்,கட்டுப்பாடும், கண் அயர்ந்திடகளவு போகிறது... காணாமல் போகிறது!காண்போம் புது மாடங்களைகாணும் கனவுடனே இருப்போம்.
- சி. சண்முகசுந்தர பட்டர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-பிப்-201810:59:42 IST Report Abuse
Bhaskaran என்னாது கோவில் நிர்வாகத்துக்கும் பக்தர்களுக்கும் நல்லுறவா பக்தர்களை அதுவும் தர்மதரிசனத்துக்கு நிற்பவர்களை ஒரு புழுவைவிட கேவலமாக treat செய்யும் அறநிலையத்துறையிடமிருந்து கோவிலை பிடுங்குவதற்கு துறவிகள் மாநாடு ஏற்பாடு செய்யவேண்டும் பிறகு நிர்வாகத்துக்கு என்ன பாராட்டுக்கள் வேண்டியது நிர்வாகத்துக்கு ஒன்றும் இவர்கள் ஜால்றாப்போடவேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-பிப்-201819:28:36 IST Report Abuse
Pasupathi Subbian இந்த கடைகளில் , போலி தெய்வ சிலைகள் விற்பது வழக்கமான ஒன்று. சிலை வியாபாரிகள் வந்துவிட்டால், கடைக்கு முன் திரை போட்டு , உள்ளே வியாபாரம் செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை